• வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்குநர் பயிற்சி
· வேளாண்மை பொறியியல் துறை, உதவிசெயற்பொறியாளர் (வே.பொ), அரசு இயந்திர கலப்பை பணிமனை பயிற்சி மையத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை இணைந்து நடத்தும்
· வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்குநர் பயிற்சி (Agricultural Machinery Demonstrator) - கிராமப்புற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்
வேளாண்மைப் பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர் (வே.பொ), அரசு இயந்திர கலப்பை பணிமனை பயிற்சி மையத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை இணைந்து நடத்தும் “வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்குநர் பயிற்சிக்காக (“Agricultural Machinery Demonstrator) கிராமப்புற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேற்படி பயிற்சிக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ள உயர்நிலைக் கல்வி (10th Std), தொழிற்பயிற்சி(ITI), பட்டயப் படிப்பு (Diploma) மற்றும் பட்டப்படிப்பு (Degree) பயின்றவர்களுக்கு 16 நாட்கள் பயிற்சி கட்டணம் ஏதுமின்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. மேற்படி பயிற்சியானது 04.02.2026 முதல் 25.02.2026 வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் வேலூர் மாவட்டம், தொரப்பாடி, தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி எதிரில் உள்ள உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, அரசு இயந்திர கலப்பை பணிமனை, அலுவலகத்திற்கு நேரில் வந்து புகைப்படம் -1, ஆதார் அட்டை நகல் -1 மற்றும் கல்வி தகுதி சான்றிதழ் நகல் -1 (TC or Mark Sheet) உள்ளிட்ட விவரங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது கைப்பேசியில் “Vetri Nichayam” என்ற செயலியினை Play Store மூலமாக பதிவிறக்கம் செய்தும் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 8012242236, 9443006742, 9444251153 மற்றும் 9095090315 என்ற கைப்பேசி எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment