• உங்களுடன் ஸ்டாலின்”நலத்திட்ட உதவிகள்.


தமிழ்நாடு முதலமைச்சர் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்களை வழங்கியதை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் 1,000 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உங்களுடன் ஸ்டாலின் திட்ட”-த்தின் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கியதை தொடர்ந்து

 வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி ஜே.பி.எம். மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 1000 பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

"மக்களிடம் செல், அவர்களோடு வாழ், அவர்களை நேசி" என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கை பாதையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் மாபெரும் நலத்திட்டமாக தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசு துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே சென்று வழங்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்கள் செயல்படுத்தப்பட்டது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 15.07.2025 அன்று முதல் 30.09.2025 வரை நகர்ப்புறத்தில் 71 முகாம்களும் மற்றும் கிராமப்புறங்களில் 140 முகாம்களும் ஆக மொத்தம் 211 முகாம்கள் நடத்தப்பட்டு பல்வேறு துறைகளின் கீழ் 1,35,581 மனுக்கள் பெறப்பட்டு 1,32,685 மனுக்கள் தீர்வு காணப்பட்டு 2,896 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதியோர் ஓய்வூதிய தொகை, ஆதரவற்ற விதவைகள் உதவி தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை மற்றும் முதிர்கன்னிகளுக்கான உதவித்தொகை கோரி வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 17,186 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 7,932 தகுதியான விண்ணப்பங்கள் ஏற்பளிப்பு செய்து ஓய்வுதியம் வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

இதில் அணைக்கட்டு வட்டத்தில் 969 பயனாளிகளுக்கும், வேலூர் வட்டத்தில் 2620 பயனாளிகளுக்கும், பேர்ணாம்பட்டு வட்டத்தில் 500 பயனாளிகளுக்கும், குடியாத்தம் வட்டத்தில் 1356 பயனாளிகளுக்கும், காட்பாடி வட்டத்தில் 1554 பயனாளிகளுக்கும், கீ.வ.குப்பம் வட்டத்தில் 933 பயனாளிகளுக்கும் என மொத்தம் 7932 பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. மேற்படி ஒப்புதல் செய்யப்பட்டுள்ள மொத்தம் 7932 பயனாளிகளில் வேலூர் வட்டத்தில் 516 பயனாளிகளுக்கும், அணைக்கட்டு வட்டத்தில் 315 பயனாளிகளுக்கும், குடியாத்தம் வட்டத்தில் 65 பயனாளிகளுக்கும் என மொத்தம் 896 பயனாளிகளுக்கு உதவித்தொகைக்கான ஆணைகளை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி வழங்கினார்.  

 இந்நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் 34 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூ.1,01,800/- வீதம் ரூ.34,61,200/- மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும்,  10 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூ.14,490/-வீதம் ரூ.1,44,900/- மதிப்பில் கைத்திறன் பேசிகளும், 4 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூ.1,05,000/- வீதம் ரூ.4,20,000/- மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியும், 3 மாற்று திறனாளிகளுக்கு திருமண உதவி திட்டத்தின்கீழ் தலா ரூ.50,000/- மற்றும் 8 கிராம்  வீதம்  ரூ.1,50,000/-  மற்றும் 24 கிராம் தங்க நாணயங்களும் என மொத்தம் 51 பயனாளிகளுக்கு ரூ.41,76,100/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், சமூக நலத்துறையின் சார்பில் பட்டப் படிப்பு முடித்த 55 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50,000/- உதவித்தொகை, 12-ம் வகுப்பு முடித்த 79 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000/- உதவித்தொகை என மொத்தம் 134 பயனாளிகளுக்கு 1072 கிராம் தாலிக்கு தங்கம், ரூ.47,25,000/- திருமண உதவி தொகையும்   மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பயனடைந்த பயனாளிகள் தெரிவித்ததாவது-

வேலூர் மாவட்டம், கணியம்பாடி பகுதியை சார்ந்த  மாற்றுத்திறனாளி  பிரகாஷ், தெரிவித்ததாவது-

ன்னுடைய பெயர் பிரகாஷ்.  நான் வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் இருந்து வருகிறேன். என்னுடைய சிறு வயதில் மாடு முட்டியதனால் என்னுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு ஏற்பட்டு அன்று முதல் என்னால் நடக்க இயலவில்லை.  மேலும் எனக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளது.  சிறுவயது முதலே என்னால் வெளியே எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  வெளியே செல்ல வேண்டுமானால் அடுத்தவர்  உதவியை நாடித்தான் செல்ல வேண்டும்.

மேலும் எங்களுடைய பகுதியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் எனக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களால் இயக்கப்படும் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி  வேண்டி மனு அளித்தேன். என்னுடைய நிலைமையை கருத்தில் கொண்டு என்னுடைய மனுவினை பரிசீலினை செய்து இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நலதிட்ட உதவிகள் வழங்கும்  நிகழ்ச்சியில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான  பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியினை  மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.  இதன் மூலம் எவரின் உதவி இல்லாமல் என்னால் இனிமேல் தனியாக வெளியே செல்ல இயலும்.  என்னுடைய அன்றாட வேலைகளும் நானே பார்த்துக் கொள்ள இயலும் இந்த  சிறப்பு சக்கர நாற்காலியினை வழங்கிய  தமிழ்நாடு முதலமைச்சர்-க்கு நன்றி

வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியை சார்ந்த  மாற்றுத்திறனாளி ரேவதி,  தெரிவித்ததாவது-

என் பெயர் ரேவதி. நான் வேலூர் வேலப்பாடி பகுதியில் இருந்து வருகிறேன். நான் ஒரு மாற்றுத்திறனாளி.  என்னுடைய கணவர்  பால் வியாபாரம் செய்து வருகிறார். எனக்கு சிறுவயது முதலே  கால் ஊனம் ஏற்பட்டு என்னால் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.  நான் ஒரு இளநிலை பட்டதாரி. நான் ஒரு தனியார் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறேன். நான் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் அடுத்தவரின் உதவியோ அல்லது என்னுடைய கணவரின் உதவியின் பேரில்தான் என்னுடைய நான் வேலைக்கு சென்று வர முடியும்.  மேலும் எங்கள் பகுதியிலே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எனக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டும் என்று மனு அளித்தேன். என்னுடைய மனுவினை அதிகாரிகள் பரிசீலித்து எனக்கு விரைவில் நேர்காணல் செய்து அரசு விழாவில் எனக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட வாகனத்தை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார். இதனால் நான் வெளியே செல்வதற்கும் என்னுடைய குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதற்கும் மிக உதவியாக இருக்கும். என்னுடைய உடல்நிலை கருத்தில் கொண்டு எனக்கு இந்த வாகனத்தை வழங்கிய  தமிழ்நாடு முதலமைச்சர்-க்கு  கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமுலு விஜயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், ஒன்றிய குழு தலைவர்கள் அமுதா ஞானசேகரன் (வேலூர்), நு.எ.சத்தியானந்தம் (குடியாத்தம்), திவ்யா கமல்பிரசாத் (கணியம்பாடி),  பேர்ணாம்பட்டு நகர்மன்ற தலைவர் பிரேமா, தனிதுணை ஆட்சியர் (ச.பா.தி) சி.மாறன், வேலூர் வட்டாட்சியர் இல.வடிவேல், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மம்தா குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி