• வேலூர் மாவட்ட தொலைநோக்கு பார்வை.

·        வேலூர் மாவட்டத்தில்  அறிவுச்சார் தொழில் நுட்பம், நேர்த்தியான உட்கட்டமைப்பு, ஆரோக்கியமான வாழ்வியல் மற்றும் பசுமையான வேலூர் போன்ற இலக்குகளை  அடுத்த 5 ஆண்டுகளில் அடைய தங்களின் தொலைநோக்கு பார்வையை  provlr.tn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 94980 42453 என்ற வாட்ஸ்ஆப் தொலைபேசி எண்ணிற்கோ 07.02.2026-ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் கேட்டு கொண்டுள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின்-ன் தலைமையில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 2024-25ஆம் ஆண்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19% உயர்ந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைவிட மிக உயர்ந்த வளர்ச்சியாகும். தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மாற்றத்தை உருவாக்கும் நலதிட்டங்கள் இன்று கோடிக்கணக்கான மக்களுக்கு உதவுகின்றன. தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மக்களின் எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தொலைநோக்கு திட்டத்தை உருவாக்க உங்க கனவ சொல்லுங்க என்ற திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் அரசு ஒவ்வொரு குடும்பத்தின் கனவையும்  கேட்கிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட தொலைநோக்கு திட்டம் 2030 - உத்தி மற்றும் செயல் திட்டத்தை தயாரித்து வெளியிடவுள்ளது. அதற்காக வேலூர்  மாவட்டத்தில் அடுத்த ஐந்தாண்டுகளில் அதாவது 2030-ம் ஆண்டுக்குள் அரசு என்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற துறை சார்ந்த வல்லுநர்களின் தொலைநோக்கு பார்வையை  பெற அறிவுறுத்தியுள்ளது.

எனவே வேலூர் மாவட்டத்தில் அறிவுச்சார் தொழில் நுட்பம், நேர்த்தியான உட்கட்டமைப்பு, ஆரோக்கியமான வாழ்வியல் மற்றும் பசுமையான வேலூர் போன்ற இலக்குகளை அடுத்த 5 ஆண்டுகளில் (2030--ம் ஆண்டுக்குள்) அடைய தங்களின் தொலைநோக்கு பார்வையை  provlr.tn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 94980 42453 என்ற வாட்ஸ்ஆப் தொலைபேசி எண்ணிற்கோ 07.02.2026-ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, கேட்டு கொண்டுள்ளார்.       

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி