• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்.
· வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 660 கோரிக்கை மனுக்களை பெற்றார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை வேளாண்மைத் துறை, காவல் துறை. ஊரக வளார்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித் துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத் துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. மருத்துவத் துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 660 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்று கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாற்று திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டம், தேவராஜ் நகரை சார்ந்த நூர் என்ற மாற்று திறனாளிக்கு ரூ.2420/- மதிப்பிலான பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்று திறனாளிக்கான பிரெய்லி வாட்ச், கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு குச்சி ஆகிய நலத்திட்ட உதவிகளை நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.
அதனை தொடர்ந்து குடியாத்தம் வட்டம், தாழையாத்தம் கிராமம் ஜோகி நகரில் கப்ராஸ்தான் சுற்று சுவர் அமைக்க ரூ.39.00 இலட்சம் மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சி தலைவர் குடியாத்தம் நகராட்சி ஆணையாளர்-டம் வழங்கினார்.
முன்னதாக வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், அரியூர் மதுரா, ஆவாரம்பாளையம் பகுதியை சார்ந்த செல்வன் ஹனிஷ் பாம்பு கடித்து உயிரிழந்தமைக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியின்கீழ் ரூ.1,00,000/- நிதியுதவிக்கான ஆணையினை குடும்பத்தாரிடம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயசித்ரா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் எஸ்.ஆர்.என்.மதுசெழியன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) மாறன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர் ச.பாபு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment