• வேலூர் இரயில்வே தேர்வு பயிற்சி வகுப்பு.
· வேலூர் மாவட்டத்தை சார்ந்த படித்த இளைஞர்கள் இரயில்வே தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு பதவிகளுக்கான தேர்வுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் நடத்தப்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் அதிக அளவில் கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெற்று பயனடைய மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலமாக வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNUSRB, TRB, SSC, RRB மற்றும் IBPS போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன
தற்போது இரயில்வே தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள –பல்வேறு பதவிகளுக்கான தேர்விற்கு 22195 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு 31.01.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் 02.03.2026 ஆகும். கல்வித்தகுதி குறைந்தபட்சம் 10 –ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம் பொதுபிரிவினருக்கு ரூ.500/. ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ரூ.250/.ம் ஆகும்
இப்பயிற்சி வகுப்புகள் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு 10.02.2026 முதல் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பு காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறவுள்ளது. அதிகளவிலான பயிற்சி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. மேலும், தகவல்களுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம் அல்லது தொலைபேசி எண் 0416 2290042 மற்றும் 9499055896 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அதிக அளவிலான கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெற்று பயனடையுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment