• வேலூர் சமுதாய நாய்களுக்கான அறுவை சிகிச்சை மையம்.
· வேலூர் கால்நடை பல்நோக்கு மருத்துவமனையில் சமுதாய நாய்களுக்கான அறுவை சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சி தலைவர் திறந்து வைத்தார்.
வேலூர் தொரப்பாடியில் உள்ள கால்நடை பல்நோக்கு மருத்துவமனையில் சமுதாய நாய்களுக்கான அறுவை சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி திறந்து வைத்தார்.
வேலூர் கால்நடை பராமரிப்பு துறை, வேலூர் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து நடத்தும் சமுதாய நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை வேலூர் கால்நடை பன்முக மருத்துவமனை, கால்நடை மருந்தகம், செதுவாலை (இ) பொய்கை ஆகிய மையங்களில் தொடங்கி வைத்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பொது இடங்களில் குறிப்பாக, நகரம் மற்றும் ஊரக பகுதிகளில், தெருக்களில் சுற்றி திரியும் சமூக நாய்களால் பொது மக்களுக்கும், கால்நடைகளுக்கும் அச்சுருத்தலான சூழல் நிலவுவதை கருத்தில் கொண்டு, இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.
குறிப்பாக சமூக நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக கால்நடை பராமரிப்பு துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து செயல்படுத்தும் வகையில் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் திட்டம் தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள 100 கால்நடை நிலையங்களை தேர்வு செய்து, அந்நிலையத்தினை சமூக நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் வகையில் தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி சமூக நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையினை உள்ளாட்சி அமைப்புடன் இணைந்து செயல்படுத்தும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் வேலூர் கால்நடை பன்முக மருத்துவமனை, கால்நடை மருந்தகம், செதுவாலை (இ) பொய்கை ஆகிய 2 கருத்தடை அறுவை சிகிச்சை மையங்களில் சமூக நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் உதவி இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) மரு.அந்துவன், வேலூர் மாநகராட்சி ஆணையாளர் இரா.லெட்சுமணன், மாநகர நல அலுவலர் மரு.பிரதாப்குமார், கால்நடை மருத்துவமனை பிரதம மருத்துவர் மரு.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment