• வேலூர் தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் திட்டம்.

·        வேலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் திட்டம் - 2026 முகாம் 10.02.2026  மற்றும்  17.02.2026 ஆகிய நாட்களில்  நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர்.

                தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் திட்டத்தின்கீழ் 1 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கும், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) 10.02.2026  அன்றும், விடுப்பட்டவர்களுக்கு 17.02.2026 அன்றும் அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது. 

                மேற்படி முகாமானது அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவைகள் மூலமாக சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் நோடல் ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

                1 லிருந்து 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 1 மாத்திரையும், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 1 மாத்திரையும் வழங்கப்படுகிறது.  இந்த மாத்திரையானது காலை 9.00 மணி முதல் 4.00 வரை வழங்கப்படும். இதனை காலை சிற்றுண்டிக்கு பிறகு அல்லது மதிய உணவிற்கு பிறகு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இத்திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் 1 லிருந்து 19 வயதுக்குட்பட்ட 369831 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 117619  பெண்களுக்கும் மொத்தம் 487450 நபர்களுக்கு  குடற்புழு நீக்க மாத்திரை வழங்க இலக்கு நிர்ணயக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

                குடற்புழு நீக்கத்தினால் இரத்த சோகை தடுக்கப்படுகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்கவும், அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. குழந்தைகள் நாள்தோறும் அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளிக்கு வருவது அதிகரிக்கிறது. 

                மேற்படி  முகாமினை பயன்படுத்தி கொண்டு குடற்புழு தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்துள்ளார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி