• விருபாட்சிபுரம் நகர்புற நல வாழ்வு மையம்.

·         விருபாட்சிபுரம் காந்தி நகரில் ரூ.1.20 கோடி செலவில் நகர்புற நல வாழ்வு மையம் - .பி.நந்தகுமார் எம்.எல்.., திறந்து வைத்தார்.

     வேலூர், விருபாட்சிபுரம் பகுதியில் நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள்  பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். பொது மக்களின் கோரிக்கையை ஏற்று 54-வது வார்டு விருபாட்சிபுரம்  காந்திநகர் பகுதியில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 6 படுக்கை வசதி கொண்ட நகர்புற நல வாழ்வு மையம் புதியதாக கட்டப்பட்டது.

            இதன் திறப்பு விழாவிற்கு வேலூர் தெற்கு மாவட்ட தி.மு.., செயலாளர் .பி.நந்தகுமார் எம்.எல்.., தலைமை தாங்கி நலவாழ்வு மையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். அதை தொடர்ந்து உள்ளே சென்று நோயாளிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

      மேலும் அதன் வளாகத்தில் மரக்கன்று நட்டு பொதுமக்களிடையே பேசுகையில், உங்கள் பகுதிக்கு தேவையான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர தேவைக்கு என மருத்துவமனை கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இங்கு அவசர சிகிச்சைக்கு டாக்டர் ஒருவர் இருப்பார். இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

     விழாவில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் லட்சுமணன், 3-வது மண்டல குழு தலைவர் யூசுப்கான், அல்லாபுரம் பகுதி செயலாளர் சி.எம்.தங்கதுரை, ஒப்பந்ததாரர் வேலூர் கே.எஸ். கன்ஸ்ட்ரக்சன்ஸ் உரிமையாளர் சிட்டிபாபு, 54-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் வி.பி.எல்.சுதாகர், 57-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் ஆண்டாள் விநாயகம், 57-வது  வட்ட செயலாளர் பி.விநாயகம், 54-வது வட்ட பொறுப்பாளர் ஜி.வெங்கடேசன், 55-வது வட்ட செயலாளர் கே.ரமேஷ்பாபு, 53-வது வட்ட செயலாளர் டி.தேவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி