• வேலூர் பாலாற்றங்கரையில் மயான கொள்ளை திருவிழா.

·         வேலூர் பாலாற்றங்கரையில் மயான கொள்ளை திருவிழா 

·         ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு.

     வேலூர் மாவட்டம், வேலூரில் மஹா சிவராத்திரியின் மறுநாள் மயான கொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் பாலாற்றங்கரையில் மயான கொள்ளை திருவிழாவானது நடைபெற்றது. இறந்தவர்களின் சமாதிகளில் அவர்களுக்கு  விருப்பமானவைகளை வைத்து படைத்தனர்.

    பின்னர் விருதம்பட்டு, அம்பேத்கர் நகர், கோட்டை சுற்றுசாலை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் வந்து அம்மன் ஆற்றில் இறங்கியது. முன்னதாக பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனை செலுத்த காளி, பார்வதி, சிவன் உள்ளிட்ட வேடங்களை அணிந்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்து மயான கொள்ளை விழாவில் பங்கேற்றனர்.

  இதில் எலுமிச்சை பழங்கள், சில்லரை காசுகளை அம்மன் மீது வீசி எறிந்தனர். வேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரகணக்கான மக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். மயான கொள்ளை விழாவை முன்னிட்டு வேலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி