• ஜாக்டோ ஜியோ சார்பில் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு.
· வரும் 8-ம் தேதி சென்னையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் ஜாக்டோ ஜியோ சங்கங்களின் சார்பில் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு
· பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பது என முடிவு
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் ஜாக்டோ ஜியோவின் ஒருங்கிணைந்த மாவட்ட, மாநில நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் ஜோஷி தலைமையில் நடைபெற்றது.
இதில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஜனார்த்தனன், சேகர், ஜெயகாந்தன், மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழக முதல்வர் அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டம் குறித்தும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் விளக்கி பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் கூறுகையில்,
தமிழக அரசும், முதல்வரும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்தும் வகையில் அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டம் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.
மேலும் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே வரும் 8-ம் தேதி சென்னையில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் பல லட்சம் பேர் பங்கேற்கும் இம்மாநாட்டை தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிக்கும் மாநாடாக நடத்தவுள்ளோம்.
இதில் மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தவுள்ளோம். இதற்காக பிரச்சார இயக்கம் மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது என கூறினார்.

Comments
Post a Comment