• வேலூரில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்பாட்டம்.
· வேலூரில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்பாட்டம்.
வேலூர் மாவட்டம், வேலூர், அண்ணாசாலையில் தலைமை தபால் நிலையம் அருகில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆர்பாட்டம் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு தமிழகத்திற்கு பட்ஜெட்டில் போதுமான நிதியை ஒதுக்கவில்லை எனவும், தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி பங்கீட்டை வழங்கவில்லை எனவும், அமெரிக்காவின் விளை பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதித்த மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு துணை போகும் அதிமுக-வை கண்டித்தும் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் அவைதலைவர் முகமது சகி, கூட்டணி கட்சிகள் சுந்தர் விஜி, டீக்காராமன், லதா, சங்கரி, இக்பால் உள்ளிட்ட பல கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு பேசுகையில்,
வரும் 2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் இந்திய ஜனநாயகத்திற்கு வாழ்வா சாவா என்ற தேர்தல். இதில் சீட்டு எண்ணிகைகள் முக்கியமல்ல. ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கூறியும் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம். ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும். அப்போதுதான் பாஜக-வை தோல்வி அடைய செய்ய முடியும் என பேசினார்.
திமுக கூட்டணி கட்சிகள் ஆர்பாட்டத்திலேயே, அதிக சீட்டுகளும், ஆட்சியில் பங்கும் கேட்க வேண்டாமென கூட்டணி கட்சியின் தலைவரே பேசியது, காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியையும், திமுக-வினருக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

Comments
Post a Comment