• ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு.
· தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி II மற்றும் II A-முதன்மை தேர்வு வேலூர் மாவட்டத்தில் 08.02.2026 மற்றும் 22.02.2026 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர்.
வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தொகுதி- II மற்றும் தொகுதி II A பணிகள்) பதவிகளுக்கான குருப் 2 மற்றும் 2 A தேர்வானது வருகிற 08.02.2026 அன்று முற்பகல் 09.30 மணி முதல் 12.30 மணி வரையிலும் OMR Method) பிற்பகல் 02.30 மணி முதல் 05.30 மணி வரையிலும் (Descriptive Method) நடக்கவிருக்கிறது. வேலுார் மாவட்டத்திலுள்ள அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் முற்பகல் 171 தேர்வர்களும், பிற்பகல் 176 தேர்வர்களும் இத்தேர்வினை எழுதுகின்றனர்.
மேலும் குருப் 2–விற்கான தேர்வு 22.02.2026- அன்று முற்பகல் 09.30 மணி முதல் 12.30 மணி வரையில் (Descriptive Method) நடைபெறுகிறது. வேலுார் மாவட்டத்திலுள்ள அரசினர் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் 54 தேர்வர்கள் இத்தேர்வினை எழுதுகின்றனர்.
01 இயங்கு குழு (Mobile Team) வட்டாட்சியர் நிலையிலான அலுவலரை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறை மூலம் மேற்படி தேர்வுக் கூடத்தில் இரண்டு காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வு நடைப்பெறும் தேர்வு கூடங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சார துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்வில் பங்குபெறும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு முற்பகல் நடைபெறும் தேர்விற்கு காலை 08.30 மணிக்குள் வரவேண்டும். பிற்பகல் நடைபெறும் தேர்விற்கு 01.30 மணிக்குள்ளும் வர வேண்டும். முற்பகல் தேர்விற்கு காலை 09.00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் மற்றும் பிற்பகல் தேர்விற்கு 02.00 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் எவரும் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வர்கள் கைபேசி, ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் போன்ற எந்தவித எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு கூடங்களுக்கு எடுத்துவரக்கூடாது. மேலும் தேர்விற்கு வரும் தேர்வர்கள் அனைவரும் கட்டாயம் நுழைவுசீட்டு கொண்டு வரவேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment