• வேலூர் அனைத்து கட்சி பிரமுகர் ஆலோசனை கூட்டம்.


 ·        வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல்  தீவிர  திருத்தம் 2026 குறித்த அனைத்து கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் – வாக்காளர் பட்டியல் சிறப்பு  பார்வையாளர் தீபக் ஜாக்கப் தலைமையில்,  வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் முன்னிலையில்  நடைபெற்றது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல்  தீவிர  திருத்தம் 2026 குறித்து அனைத்து கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம்  வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் தீபக்ஜாக்கப் தலைமையில், வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை

 வாக்காளர் பட்டியல்  தீவிர திருத்தம் 2026 ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பணிகள் நடைபெற்று வருகிறது.  அடுத்த 10 நாட்களுக்குள் இப்பணிகள் முடிவுற்று, இறுதி வாக்காளர் பட்டியல்  பிப்ரவரி 17 வெளியிடப்படும்.  ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பணிகளை ஆய்வு செய்வது இது இரண்டாவது முறை. வேலூர் மாவட்டத்திற்கு. ஏற்கனவே வருகை புரிந்து  இப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து கட்சி பிரமுகர்களும் இந்த  ஆலோசனை கூட்டத்தில் தங்களுடைய கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இக்கருத்துகளை மாவட்ட தேர்தல் அலுவலரோடு கலந்து ஆலோசித்து அதற்குரிய  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) (பொ) பொ.குணசேகரன், வாக்காளர் பதிவு அலுவலர்கள் வேலூர் சட்டமன்ற தொகுதி / மாநகராட்சி ஆணையாளர் இரா.லெட்சுமணன், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி / வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி / குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி,  காட்பாடி சட்டமன்ற தொகுதி / தனித்துணை ஆட்சியர் (.பா.தி) மாறன், கீ..குப்பம் சட்டமன்ற தொகுதி / மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி