• வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு.

·         வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வருவாய் துறை ஊழியரின் இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு  

·         இரு சக்கர வாகனத்தை தனித்தனியாக பிரித்து போட்டு ஆய்வு - பாம்பு தப்பி ஓட்டம்.

       வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையில் பணியாற்றும் சதிஷ்குமார் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்திவிட்டு பணிக்கு சென்றிருந்தார்.

     இந்த நிலையில் அந்த இரு சக்கர வாகனத்தில் பாம்பு ஒன்று புகுந்ததை அங்கிருந்தவர்கள் பார்த்து வாகன உரிமையாளர் சதிஷ்குமாருக்கு தகவல் கொடுத்தனர்.

     இதனை அடுத்து தீயணைப்பு துறைக்கு இரு சக்கர வாகனத்தில் பாம்பு புகுந்தது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தீய்ணைப்பு துறையினர் பாம்பை தேடினர். பின்னர் இரு சக்கர வாகன மெக்கானிக்கை அழைத்து வைத்து இரு சக்கர வாகனத்தை தனித்தனியாக பிரித்து பார்த்தபோது, பாம்பு இரு சக்கர வாகனத்தில் இல்லாமல் ஓடிவிட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்புகள் நடமாட்டம் உள்ளது. இதனால் சிறிது நேரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி