• பிரம்மபுரம் மகா முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்.


 ·         பிரம்மபுரத்தில் உள்ள  500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகா முனீஸ்வரர் மற்றும் சப்தகன்னியர்கள் ஆலய மஹா கும்பாபிஷேகம் திரளானோர் பங்கேற்று தரிசனம்

                வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே பிரம்மபுரம்  கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மஹா முனீஸ்வரர் மற்றும் சப்த கன்னியர்கள் ஆலய மஹா கும்பாபிஷேகமானது நடைபெற்றது. 28 அடி உயரத்தில் பழமையான ஸ்ரீ மஹா முனீஸ்வரர் ஆலயம் புணரமைக்கப்பட்டது. சப்தகன்னியர்களும் புணரமைக்கப்பட்டு இரண்டு நாட்கள் யாக பூஜைகளை செய்து யாக சாலையிலிருந்து புனித நீர் கலசங்கள் மேள, தாளங்கள் முழங்க ஸ்ரீ மஹா முனீஸ்வரர் மற்றும் சப்தகன்னியர்களுக்கு மஹா கும்பாபிஷேகமானது நடைபெற்றது.

     இதில் காட்பாடி, பிரம்மபுரம், சேவூர், தாங்கல் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி