• வேலூர் மத்திய சிறையில் சிறப்பு எழுத்தறிவு திட்ட தேர்வு.
· வேலூர் மத்திய சிறையில் சிறப்பு எழுத்தறிவு திட்ட தேர்வு.
வேலூர் மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் 72 பேர் மற்றும் பெண்கள் சிறையில் 19 பேர் மொத்தம் 91 பேர் சிறப்பு எழுத்தறிவு திட்ட தேர்வின் மூலம் 15 வயதிற்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி 2025 முதல் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான சிறப்பு எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது. இதை பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் இயக்குனர் முனைவர்.பெ.குப்புசாமி பார்வையிட்டு படிப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார். மேலும் படிப்பதன் மூலம் தன்னம்பிக்கை வளரும், பொது வாழ்க்கைக்கு படிப்பு அவசியம் எனவும் கூறினார்.
உடன் மாவட்டக் கல்வி அலுவலர் செந்தில்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.இராஜன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு அருண்குமார், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் கோவிந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆண்கள் சிறையில் சிறப்பு எழுத்தறிவு திட்டம் தேர்வு சிறை கண்காணிப்பாளர் தர்மராஜ், சிறை அலுவலர் ரத்தினகுமார், துணை சிறை அலுவலர் சிவபெருமாள், ஆசிரியர்கள் திலிப்குமார், அருண், தயாநிதி, கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர். வேலூர் பெண்கள் சிறையில் சிறை கண்காணிப்பாளர் செல்வி.ஆண்டாள், சிறை அலுவலர் அன்புசெல்வி மற்றும் சிறை ஆசிரியர்.அஞ்சலா ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment