• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

  • வேலூர்  மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம்  689 கோரிக்கை மனுக்களை பெற்றார்.

                வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில்  நடைபெற்றது.

மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை வேளாண்மை துறை, காவல் துறை. ஊரக வளார்ச்சி துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சி துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சார துறை சார்பான குறைகள், மாற்று திறனாளிகள் நலத்துறை. மருத்துவ துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 689 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

குறை தீர்வு நாள் கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் சமூகநீதி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களின் தனித்திறனை மேம்படுத்தும் விதமாக 31.01.2026 அன்று  நடைபெற்ற கலை திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற சமூகநீதி விடுதிகளில் தங்கி பயிலும் 24 மாணவ, மாணவிகளுக்கு  சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் வேலூர் மாவட்டம்,  அணைக்கட்டு வட்டம், பின்னத்துறை பகுதியை சார்ந்த அலமேலு பாம்பு கடித்து உயிரிழந்தமைக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியின்கீழ் ரூ.1,00,000/- நிதியுதவிக்கான ஆணை மற்றும் காட்பாடி வட்டம், வசந்தபுரம் பகுதியை சார்ந்த செல்வன் லித்திக் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தமைக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியின்கீழ் ரூ.1,00,000/- நிதியுதவிக்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.

முன்னதாக வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத்  கூட்டரங்கில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் எஸ்.ஆர்.என்.மதுசெழியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயசித்ரா, மகளிர் திட்ட இயக்குநர் பாலமுருகன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) மாறன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி