• வேலூர் இராணுவ மகளிர் ஆட்சேர்ப்பு முகாம்
- வேலூர் இராணுவ மகளிர் ஆட்சேர்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சி தலைவர் முகாமை தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், இராணுவ மகளிர் ஆட்சேர்ப்பு முகாமை ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டத்தில் இந்திய இராணுவத்தில் மகளிர் இராணுவ காவலர் (WMP) பணி உட்பட அனைத்து வகை பணிகளுக்கான இந்திய இராணுவ அக்னி வீரர் ஆட்சேர்ப்பு முகாம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 2026 பிப்ரவரி 05 முதல் நடைபெற்று வருகிறது.
ஏறக்குறைய 6,000 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். தினமும் 800 முதல் 900 பேர் பங்கேற்று, இந்த ஆட்சேர்ப்பு முகாம் மிகப்பெரிய அளவிலே இங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்திய ராணுவத்திலிருந்து வந்திருக்கிற அதிகாரிகளுக்கு நம்முடைய மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல் துறை வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்பு நடைமுறையானது முழுவதும் நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் மற்றும் முற்றிலும் தகுதி அடிப்படையிலானது. அனைத்து நிலைகளிலும் தேர்வு Fully Automated என்பதால் எந்தவொரு தனிநபர், முகவர் அல்லது தரகர் தேர்வு செயல்முறையை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது.
இம்முகாமில் இராணுவ அதிகாரி ஆர்.கே.அவஸ்தி, இராணுவ உயர் அலுவலர்கள் மற்றும் தேர்வர்கள் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment