• வேலூர் போதை பொருட்கள் விற்பது முற்றிலும் தடை.
· வேலூர் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகில் போதை பொருட்கள் விற்பது முற்றிலும் தடை.
வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகில் போதை பொருட்கள் விற்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகில் இயங்கி வரும் பெட்டி கடைகள் மற்றும் இதர கடைகளைக் காவல் துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் தொடர்ந்து கண்காணித்து தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, கூலிப், ஹான்ஸ், புகையிலை போன்ற போதை பொருட்கள் இருக்கும் பட்சத்தில் அக்கடைகள் உடனடியாக சீல் வைத்து மூடப்படும்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உடல்நலனுக்காக மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் அருகே இயங்கி வரும் பெட்டி கடைகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வது முற்றிலும் தடைசெய்யப்படுகிறது.
காவல் துறையின் சோதனையின்போது இப்பொருட்கள் கண்டறியப்பட்டால் கடைகளின் உரிமைத்தை ரத்து செய்து இக்கடைகள் முழுவதுமாக சீல் வைத்து மூடப்படும் எனவும், கடைகளின் உரிமையாளர்கள் மீது காவல் துறையினர் மூலம் தமிழ்நாடு சட்டம் 14/1982-ன்படி தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment