• வேலூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு விண்ணப்பங்கள்.

·        வேலூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு விண்ணப்பங்கள்.

                தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, கீழ்க்காணும் வட்டாரங்களில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வ.எண்.

ஊராட்சி ஒன்றியத்தின்

 பெயர்

காலிப்பணியிடத்தின் எண்ணிக்கை

1

அணைக்கட்டு

1

2

குடியாத்தம்

2

3

காட்பாடி

2

4

கணியம்பாடி

4

5

கீ.வ.குப்பம்

1

6

பேர்ணாம்பட்டு

1

7

வேலூர்

2

மொத்தம்

13

 வட்டார ஒருங்கிணைப்பாளர்  பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் 

வ.எண்.

தகுதி விவரம்

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு

1

கல்வித்தகுதி

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டபடிப்பு (Graduate) மற்றும் கணிணி தொடர்பான (M.S.Office) 3 மாத பயிற்சி பெற்றமைக்கான சான்றிதழ் இருக்க வேண்டும்

2

வயது

30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

3

முன் அனுபவம்

மகளிர் சுய உதவிக்குழு தொடர்பான செயல்பாட்டில் 5 வருட முன் அனுபவம்.

4

வசிப்பிடம்

விண்ணப்பிக்கும் வட்டாரத்திற்குள் வசிக்க வேண்டும்

5

நிபந்தனைகள்

TNSRLM, புதுவாழ்வு, IFAD  மற்றும் பல்வேறு அரசு திட்டங்களில் நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் காரணமாக பணிகளிலிருந்து நிறுத்தப்பட்டிருக்கவோ அல்லது நீக்கப்பட்டிருக்கவோ கூடாது

                 மேற்காணும் வட்டாரங்களில் வட்டார ஒருங்கிணைப்பாளாராக பணியாற்றிட தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு TNSRLM, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சத்துவாச்சாரி, வேலூர் என்ற முகவரிக்கு 16.02.2026-க்கு முன்னதாக நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ வந்து சேர வேண்டும்  என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி