• பி.டி.லீ. கல்லூரியில் AICRA நிறுவன உறுப்பினர் தொடக்க விழா.


 காஞ்சிபுரம் பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் பொறியியல் கல்லூரியில் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் (AICRA) நிறுவன உறுப்பினர் தொடக்க விழா.

         காஞ்சிபுரம் அடுத்த ஊவேரியில் அமைந்துள்ள பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் இயந்திரவியல் துறை (Department of Mechanical Engineering) சார்பில், "அகில இந்திய ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் கவுன்சில்" (AICRA) நிறுவன உறுப்பினர் தொடக்க விழா கல்லூரியின் கருத்தரங்க கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:

     இந்நிகழ்விற்கு பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதியுமான P.கலையரசன் தலைமை தாங்கி ஆசி வழங்கினார்.

     இயந்திரவியல் துறைத் தலைவரும் பேராசிரியருமான முனைவர் S. பூபதி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

         கல்லூரி முதல்வர் முனைவர் P. பழனிசாமி மற்றும் இயக்குனர் முனைவர் M. அருளரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

       விழாவின் சிறப்பு விருந்தினர்களாக ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் CSR பிரிவின் தலைவர் திரு. ஜான் அலெக்ஸ் மற்றும் டெல்லி AICRA-வின் மண்டல இயக்குனர் ஈரவன் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு, ரோபாட்டிக்ஸ் துறையின் எதிர்கால வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து மாணவர்களிடையே உரையாற்றினர்.

முக்கிய நிகழ்வுகள்:

           நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் முனைவர் N.கிருஷ்ணமூர்த்தி மற்றும் K.அன்புமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களின் சாதனைகள் குறித்த அறிமுக உரையை வழங்கினர்.

           அறக்கட்டளையின் அறங்காவலர்கள், தொழில்நுட்ப மற்றும் கல்வி ஆலோசகர்கள் முன்னிலையில் இந்த உறுப்பினர் சேர்க்கை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.

           நிகழ்ச்சியின் நிறைவாக, இயந்திரவியல் துறை உதவிப் பேராசிரியர் N.பிரகாஷ் நன்றியுரை வழங்கினார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை துறை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் மிக சிறப்பாக செய்திருந்தனர். இதில் ஏராளமான மாணவர்களும் பேராசிரியர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

 

Comments