• வேலூர் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி.

·        தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவுவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  மாரத்தான் போட்டியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவுவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  மாரத்தான் போட்டியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

                இந்த மாரத்தான் போட்டி வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி தொரப்பாடி எம்..ஜி-ஆர் .சிலை வரை நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  

                வேலூர் மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, ரங்கோலி கோலப்போட்டிகள், கையெழுத்து இயக்கம், வாக்காளர் உறுதிமொழி போன்ற பல்வேறு  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் வேலூர் மாவட்ட நிர்வாகம், ரெட்கிராஸ் மற்றும் வேலூர் ரோட்டரி சங்கம் இணைந்து 100 சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தி இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.

                  இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், வேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பாஸ்கரன்,  உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி, தேர்தல் வட்டாட்சியர் ரமேஷ், ரெட்கிராஸ் உறுப்பினர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.