• காட்பாடி தொகுதி வாக்குச்சாவடிகளை தேர்தல் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு.
· தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களை வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்பாடி கழிஞ்சூர் யூனியன் மிஷன் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எண்.157, 164, 165, 168, 169 மற்றும் 170 ஆகிய வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்பாடி கழிஞ்சூரில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எண் 144, 145, 146, 147 ஆகிய வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எண் 134, 135 ஆகிய வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் காட்பாடி சன்னதி தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எண்.216, 218, 225, 226 வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தயார் நிலையில் வைத்து கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் உத்தரவிட்டார்.
தொடர்ந்து காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாறை அறையை பார்வையிட்டு ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள், தபால் வாக்குகள் குறித்தும் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் இரா.லெட்சுமணன், காட்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சி.மாறன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நில அளவை) குமணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசந்தர், வட்டாட்சியர் (ச.பா.தி) வேண்டா உட்பட பலர் உடனிருந்தனர்.

Comments
Post a Comment