• அணைக்கட்டு வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் அலுவலர்ஆய்வு.

  • தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட   பகுதிகளில்  வாக்குச்சாவடி  மையங்களை வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

                        தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பலவன்சாத்துகுப்பம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் அமைக்கப்பட்டு ள்ள வாக்குச்சாவடி  மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து விருப்பாட்சிபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையம், முத்துரங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி  மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பாகாயம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி  மையம், அரியூர்  மாநகராட்சி இந்து தொடக்க பள்ளியில்  அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி  மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்குச்சாவடி மையத்தில் மின்சார வசதி, இருக்கைகள், வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு ஏதுவாக அடிப்படை வசதிகள் குறித்தும், மாற்று திறனாளிகளுக்கான சாய்தள வசதி போன்றவற்றை உறுதி செய்ய  வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் இரா.லெட்சுமணன், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.குணசேகரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமாரன்  உட்பட பலர் உடனிருந்தனர்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.