• வேலூர் மாவட்டத்தில் VST மற்றும் VVT குழு பயிற்சி வகுப்பு.

·        தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் வீடியோ கண்காணிப்பு குழு (VST) மற்றும் வீடியோ பதிவுகளை பார்க்கும் குழுக்களுக்கான  (VVT)  பயிற்சி வகுப்பு  மாவட்ட தேர்தல் அலுவலர்  மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில்   நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் வீடியோ கண்காணிப்பு குழு (VST) மற்றும் வீடியோ பதிவுகளை பார்க்கும் குழுக்களுக்கான  (VVT)  பயிற்சி வகுப்பு  மாவட்ட தேர்தல் அலுவலர்  மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது.

வீடியோ  கண்காணிப்பு குழு   (Video Surveillance Team) மேற்கொள்ளவேண்டிய பணிகள்.

ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு குழு இயங்கும். இந்த குழுவில் அலுவலர் ஒருவரும் வீடியோகிராபர் ஒருவரும் இருப்பார். இந்த குழு தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக அனைத்து விதமான பிரச்சார நுணுக்கங்களையும் படம் பிடிக்க வேண்டும்.

எந்த இடத்தில், எந்த கட்சி நடத்தும் கூட்டம், எந்த தேதியில், த்தனை மணிக்கு மேற்படி படம் பிடிக்கப்படுகிறது என்பதனை வாய்ஸ் ரெக்கார்டிங் மூலம் குரல் பதிவு செய்ய வேண்டும்.

பிரச்சார பயணத்தில் ஈடுபடுத்தப்படும் வாகனம், வாகன எண், கொடி ஏதும் வாகனத்தில் இருந்தால் கொடியுடனும் பொதுக்கூட்ட மேடையில் போடியம், ரோஸ்ட்ரம், சாதாரண நாற்காலிகள், விபி நாற்காலிகள், பந்தல் அளவு, தோரணங்கள் விவரம், எத்தனை வரிசை நாற்காலிகள் போன்றவற்றைப் படம் பிடிப்பார். அவற்றினை வாய்ஸ் ரெக்கார்டிங் மூலமும் தெரிவிக்க வேண்டும். தேவைப்படின், வாக்காளர்களின் வாய்மொழி வாக்குமூலங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் ஏதும் உள்ளனவா என்பதையும் படம் பிடிக்க வேண்டும். தொடர்புடைய சி.டி-யை தினமும் வீடியோ திவுகளைப் பார்க்கும் குழுவிற்கு (VIDEO VIEWING TEAM) இந்த குழு அனுப்ப வேண்டும். இந்தக் குழு ANNEXURE-B7 -Cue-Sheet for Video Surveillance Team  என்ற படிவத்தில்  வீடியோ எடுக்கப்படும் விவரங்களை வீடியோ பதிவுகளைப் பார்க்கும் குழுவிடம்  சமர்ப்பிக்க  வேண்டும்.

வீடியோ பதிவுகளைப் பார்க்கும் குழு ( Video Viewing Team) மேற்கொள்ள வேண்டிய பணிகள்

ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு குழு கண்காணிக்கும். அலுவலர் ஒருவரும், உதவியாளர் ஒருவரும் இக்குழுவில் இடம்பெறுவர்.

வீடியோ எடுக்கும் குழு எடுத்துக் கொடுக்கும் பதிவுகளை பார்த்து அதில் தேர்தல் செலவினம் தொடர்பான விவரங்களையும், தேர்தல் நடத்தை விதி தொடர்பான விவரங்களையும் தொகுத்து கணக்குக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்.

வாகனத்தில் எண், வகை, மேடையின் அளவு, மேடையில் போடியம், ரோஸ்ட்ரம், சாதாரண நாற்காலிகள், வி.ஐ.பி. நாற்காலிகள், பந்தல் அளவு, தோரணங்கள் விவரம், எத்தனை வரிசை நாற்காலிகள், கட் அவுட்கள் வகை / எண்ணிக்கை, மின்சார பல்புகள், சீரியல் பல்புகள் போன்றவற்றையும் கணித்து அறிக்கையளிக்க வேண்டும்.

செலவின அறிக்கையினை கணக்கு குழுவிற்கு அனுப்ப வேண்டும்.  நடத்தை விதி மீறல்கள் குறித்த அறிக்கை தேர்தல் பொது பார்வையாளருக்கும், தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் அனுப்ப வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்  மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்தார்.

இப்பயிற்சி வகுப்பில் தேர்தல் வட்டாட்சியர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.