• விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

  • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

          மே 2026-ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்,  29.05.2026  வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்ட   அரங்கில்  (5வது தளம்)  நடைபெற  உள்ளது.

இக்கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை,  வேளாண்    பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டுவளர்ச்சி துறை, மீன்வள துறை, கால்நடை பராமரிப்புத் துறை,  கூட்டுறவு  சர்க்கரை ஆலைகள்,  கூட்டுறவுத்  துறை,  நீர்வள ஆதார அமைப்பு, வனத்துறை,  மாசுக்  கட்டுப்பாடு  வாரியம்,   மின்சாரத்  துறை, போக்குவரத்துத்   துறை, பால்வள துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளார்கள்.

எனவே, வேலூர் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் களப்பிரச்சனைகளை களைந்திட இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்சனைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சனைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்திடுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.