• இராணிப்பேட்டை ரூ.12.6 லட்சம் மதிப்பு 107 செல்போன்கள் மீட்பு.

 ·        இராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.12.6 லட்சம் மதிப்புள்ள 107 செல்போன்கள் மீட்பு  

·        காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

            இராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே.சிபின் உத்தரவின் பேரில் தனிப்படை மற்றும் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் துரித நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

     இதன் தொடர்ச்சியாக, காணாமல் போன செல்போன்களின் IMEI எண்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப நடவடிக்கையின் மூலம் ரூ.12.6 லட்சம் மதிப்புள்ள 107 செல்போன்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டன. மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில்  மீட்கப்பட்ட செல்போன்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

     மேலும், செல்போன்களை மீட்க சிறப்பாக செயல்பட்ட சைபர் குற்றப்பிரிவு மற்றும் தனிப்படை காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

      இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் (CWC), காவல் ஆய்வாளர் சரஸ்வதி (மாவட்ட தனிப்பிரிவு) மற்றும் காவல் அதிகாரிகள், காவலர்கள் கலந்து கொண்டனர்.

      பொதுமக்கள் தங்களது செல்போன்கள் காணாமல் போனாலோ அல்லது தவறவிட்டாலோ உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.