• அணைக்கட்டு நடைபெற்ற 2-ம் நாள் வருவாய் தீர்வாயம்.
· அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 2-ம் நாள் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
· வருவாய் ஆவணக் கணக்குகளை ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து 87 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் / தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் பெற்றுக்கொண்டார்.
அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435-ம் பசலி ஆண்டிற்கான 2-ம் நாள் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026-ல் மாவட்ட ஆட்சி தலைவர் தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் கலந்து கொண்டு வருவாய் ஆவண கணக்குகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து 87 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
வேலூர் மாவட்டத்தில் 6 வட்டங்களில் ஜமாபந்தி 17.06.2026 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜமாபந்தி 24.06.2026 அன்று வரை அரசு விடுமுறை நாட்கள் மற்றும் திங்கட்கிழமை தவிர்த்து இதர நாட்களில் நடைபெற உள்ளது.
அணைக்கட்டு வட்டத்தில் நடைபெற்ற இரண்டாம் நாள் ஜமாபந்தியில் அணைக்கட்டு உள்வட்டத்தில் இலவம்பாடி, புத்தூர் ஆகிய கிராமங்கள், ஊசூர் உள்வட்டத்தில் ஊசூர், பூதூர், சேக்கனூர், தெள்ளூர், புலிமேடு, அத்தியூர், குப்பம், முருக்கேரி, செம்பேடு ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சி தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் மனுக்கள் பெற்று, வருவாய் ஆவணப் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
இந்த ஜமாபந்தி நிகழ்வில் நிலவரி கணக்குகள், பட்டா மாற்றம், பட்டா நகல் கோருதல், அரசு நலத்திட்டங்களின் கீழ் உதவி கோருதல், கிராம வளர்ச்சிக்கான திட்டப்பணிகள், குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் இதர தேவைகள் தொடர்பான 87 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சி தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் அவர்களால் பெறப்பட்டது.
தொடர்ந்து மனு அளித்த 3 மாற்று திறனாளிகளின் மனுவினை உடனடியாக பரிசீலனை செய்து, அவர்களுக்கு தலா ரூ.3,800/- மதிப்பிலான நவீன காதொலி கருவிகளையும், 1 மாற்று திறனாளிக்கு, மாற்று திறனாளிக்கான அடையாள அட்டையையும் மாவட்ட ஆட்சி தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் வழங்கினார்.
அணைக்கட்டு வட்டத்தில் பள்ளிகொண்டா, கீழாச்சூர், வெட்டுவானம், கோவிந்தம்பாடி, பிராமணமங்கலம், விரிஞ்சிபுரம், ஒதியத்தூர், கொம்மளாங்குட்டை, கந்தனேரி, கழனிப்பாக்கம், இறையங்காடு, செதுவாலை, பொய்கை ஆகிய கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் நாளை 19.06.2026 அன்று நடைபெறவுள்ள 1435-ம் பசலி ஆண்டிற்கான மூன்றாம் நாள் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026-ல் மாவட்ட ஆட்சி தலைவர் மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
இந்நிகழ்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சி.மாறன், உதவி இயக்குநர் (நில அளவை) குமணன், துணை ஆட்சியர் (பயிற்சி) கணேஷ், மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, வட்டாட்சியர் சுகுமாரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment