• வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையின் 22-ம் ஆண்டு விழா.

·         உலக அளவில் புகழ்பெற்ற வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி குழும ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் எஸ்.என்.எச்.ஆர்.சி. மருத்துவமனையின் பாரம்பரிய பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் 22-வது ஆண்டு விழா.

      வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், திருமலைகோடி, உலக அளவில் புகழ் பெற்ற தங்க கோயில் வேலூர், ஸ்ரீபுரம், ஸ்ரீ நாராயணி பீடம், ஸ்ரீ நாராயணி குழும ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஸ்ரீ சக்தி அம்மாவின் தெய்வீக அருளாசியுடன், எஸ்.என்.எச்.ஆர்.சி. (SNHRC) மருத்துவமனையின் 22-வது ஆண்டு விழா ஸ்ரீ நாராயணி மஹாலில் கோலாகலமாக நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் (ASP) பி.எஸ்.தனுஷ்குமார் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.

     இவ்விழாவில் ஸ்ரீ நாராயணி கல்வி நிறுவனங்களின் இயக்குநர் பேராசிரியர் .பாலாஜி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கீதா இனியன், நிர்வாக அலுவலர் டாக்டர் மாதவி, டிவைன் கஃபே மற்றும் ஸ்ரீ சுகி பார்மா குழுமங்களின் இயக்குநர் ஸ்ரீநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆண்டு விழாவை சிறப்பித்தனர்.

     இன்ஃபினிட்டி கிராண்ட் இவென்ட்ஸ் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்று, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

            மேலும், நோயாளிகளின் வசதிக்காக ஆன்லைன் மருத்துவ நேர முன்பதிவு (Online Appointment Booking) சேவையும் இவ்விழாவில் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்நிகழ்வில் மருத்துவ ஆலோசகர்கள், துறை தலைவர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.