• தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் 28.06.2026 அன்று நடைபெறும்.

·        தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் 28.06.2026 அன்று நடைபெறும்
மாவட்ட  ஆட்சி தலைவர் தகவல்.

                போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு 1995-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

                இந்த ஆண்டு 28.06.2026-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று 5 வயதிற்குட்பட்ட 99785 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. மேலும், முகாம் காலை 7.00 மணிக்கு தொடங்கி மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

                வேலூர் மாவட்டத்தில் இப்பணியினை சிறப்பாக செயல்படுத்த 950 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டும் கூடுதலாக தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கின்ற சுங்கச்சாவடிகளிலும் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பேருந்து மற்றும் இரயில் நிலையங்கள், போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள மலைப் பகுதிகளிலும் முகாம்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.  இது மட்டுமல்லாமல் அண்டை மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து பணி மற்றும் வியாபாரம் நிமித்தமாக நமது மாவட்டத்தில் வந்து தங்கியுள்ள கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், மேம்பால பணியாளர்கள், சாலை விரிவாக்க பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், பொம்மை விற்பனையாளர்கள் மற்றும் இலங்கைவாழ் தமிழர்கள் ஆகியவர்களுக்கும் சிறப்பு முகாம்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

                இப்பணியில் பொது சுகாதார துறை, கல்வி துறை, சமூக நல துறை, வருவாய் துறை, உள்ளாட்சி துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள், மகளிர் திட்ட பணியாளர்கள் உட்பட 2,168 பணியாளர்களும், மேற்பார்வையிட 130 மேற்பார்வையாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

                பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேவையான சொட்டு மருந்துகள் எடுத்து செல்வதற்காகவும் வேலூர் மாவட்டம் முழுவதும் பிற துறை மற்றும் சுகாதார துறை வாகனங்கள் பயன்படுத்தபடவுள்ளது.

                பிறந்த பச்சிளங்குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே வழக்கமாக போடும் போலியோ சொட்டு மருந்து எத்தனை முறை போடப்பட்;டிருந்தாலும் இம்முறையும் அவசியம் சொட்டு மருந்து போட்டு கொள்ள வேண்டும்.               

                பொதுமக்கள் அனைவரும் இத்திட்டத்தில் முழுமையாக பங்கேற்று அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் முகாம்களில் சொட்டு மருந்து கொடுத்து “இளம்பிள்ளைவாத நோயற்ற வருங்கால சமுதாயத்தைஉருவாக்க ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.