• அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் 4-ம் நாள் ஜமாபந்தி.

 ·        அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 4-ம் நாள் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)

·        மாவட்ட ஆட்சி தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் கலந்து கொண்டு வருவாய் ஆவணக் கணக்குகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து  253   கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435-ம் பசலி ஆண்டிற்கான நான்காம் நாள் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026-ல் மாவட்ட ஆட்சி தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் கலந்து கொண்டு வருவாய் ஆவண கணக்குகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து 253 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

                வேலூர் மாவட்டத்தில் 6 வட்டங்களில் ஜமாபந்தி 17.06.2026 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.  ஜமாபந்தி 24.06.2026 அன்று வரை அரசு விடுமுறை நாட்கள் மற்றும் திங்கட்கிழமை தவிர்த்து இதர நாட்களில் நடைபெற உள்ளது.

                அணைக்கட்டு வட்டத்தில் நடைபெற்ற  4-ம் நாள் ஜமாபந்தியில் சத்தியமங்கலம், வசந்தநடை, ஒக்கணாபுரம், ஒடுக்கத்தூர், மேலரசம்பட்டு, உமையம்பட்டு, வண்ணாந்தாங்கல், கத்தாரிகுப்பம், மடையப்பட்டு, அத்திக்குப்பம், நேமந்தபுரம், வரதலம்பட்டு, பின்னத்துரை, கீழ்கொத்தூர், சேர்பாடி, கெங்கசாணிகுப்பம், முள்ளுவாடி, பெரியபணப்பாறை, பீஞ்சமந்தை, புதுக்குப்பம், எள்ளுபாறை, பெலாம்பட்டு, ஜார்தான்கொல்லை, அல்லேரி ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சி தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் மனுக்கள் பெற்று, வருவாய் ஆவணப்  பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

                இந்த ஜமாபந்தி நிகழ்வில் நிலவரி கணக்குகள், பட்டா மாற்றம், பட்டா நகல் கோருதல், அரசு நலத்திட்டங்களின்கீழ் உதவி கோருதல், கிராம வளர்ச்சிக்கான திட்ட பணிகள், குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் இதர தேவைகள் தொடர்பான 253 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சி தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் பெறப்பட்டது.

மேலும், இன்று மனு அளித்த 1 மாற்றுத்திறனாளியின் மனுவினை உடனடியாக பரிசீலனை செய்து, அவருக்கு ஊன்றுக்கோல் மற்றும் கண் கண்ணாடியினை மாவட்ட ஆட்சி தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் வழங்கினார்.

அணைக்கட்டு வட்டத்தில்  அகரம், தோளப்பள்ளி, அக்ரஹாரம், ஆர்ஜாதி, பாலப்பாடி, குருவராஜபாளையம், ராமநாயணிகுப்பம், நெடுமிபாளையம், அரிமலை, குப்பம்பாளையம், சின்னபள்ளிக்குப்பம், பாக்கம், பாக்கம்பாளையம், மேல்பள்ளிப்பட்டு, தென்புதுபட்டு, ஆசனாம்பட்டு, கல்லப்பாறை, குப்பம்பட்டு, வேப்பம்குப்பம் ஆகிய கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் 24.06.2026 அன்று  நடைபெறவுள்ள 1435-ம் பசலி ஆண்டிற்கான ஐந்தாம்  நாள் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026-ல்  மாவட்ட ஆட்சி தலைவர் மனுக்களை அளித்து பயன் பெறலாம்.

                இந்நிகழ்வின்போது தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சி.மாறன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், துணை ஆட்சியர் (பயிற்சி) கணேஷ், மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, வட்டாட்சியர்
சுகுமாரன்  உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.