• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்.
- வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்.
- மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 532 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு 182 பயனாளிகளுக்கு ரூ.35.21 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதேமில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவி தொகை வேளாண்மை துறை, காவல் துறை. ஊரக வளார்ச்சி துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சி துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சார துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. மருத்துவ துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 532 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
குறை தீர்வு நாள் கூட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் கீழ் 143 பயனாளிகளுக்கு சிறுதொழில் செய்ய தலா ரூ.15,000/- வீதம் ரூ.21,45,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 2 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியமாக தலா ரூ.50,000/-வீதம் ரூ.1,00,000/- மானிய தொகையும், 1 பயனாளிக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.25,000/-யும் மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8,55,600/-மதிப்பிலான செயற்கை அவயங்களும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு சீர்மரபினர் நல வாரிய அடையாள அட்டைகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 15 நபர்களுக்கு ரூ.3,95,000/- மதிப்பில் தீருதவி தொகைக்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, தனித்துனை ஆட்சியர் (ச.பா.தி) சி.மாறன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர்கள் ஏ.செந்தில்குமார் (வேலூர்), செல்வி சுபலட்சுமி (குடியாத்தம்), மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment