• கல்பனா சாவ்லா விருதினை பெற விண்ணப்பிக்கலாம்.
· கல்பனா சாவ்லா விருதினை பெற விண்ணப்பிக்கலாம்.
· 2026-ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதினை பெற வேலூர் மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய நபர்கள் (https://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் 01.06.2026 முதல் 19.06.2026 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சி தலைவர்.
2026-ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கல்பனா சாவ்லா விருது வீர தீர செயலினை புரிந்த பெண்ணிணை பாராட்டி வெள்ளி பதக்கத்தில் தங்க மூலாம் பூசப்பட்ட பதக்கமும், ரூ. 5,00,000 ரொக்கப்பரிசும் வழங்கப்பட இருக்கிறது. மேற்காணும் விருதினை பெற தகுதியுள்ள நபர்கள் (https://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் 01.06.2026 முதல் 19.06.2026 வரை விண்ணப்பிக்கலாம்.
கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகள்
1. வீர தீர செயல் குறித்த விவரம் அதனை பற்றிய செய்திக்குறிப்புகள் மற்றும் புகைப்படங்கள் வீர தீர செயலுக்காக பாராட்டு சான்றிதழ் பெற்றவர்கள்
2. 19.06.2026க்கு பிறகு பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் ஏற்க இயலாது என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
3. இணையத்தில் பதிவு செய்து தனியரை பற்றி முழு விவரங்கள் அடங்கிய கருத்துருவினை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், 4 வது மாடி. B Block, சத்துவாச்சாரி, வேலூர் என்ற அலுவலக முகவரியில் சேர்க்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
மேற்காணும் தகுதிகள் உள்ள நபர்கள் இவ்விருது பெற இணையதளத்தில் 19.06.26-க்குள் பதிவு செய்து பயனடையுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment