• வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது.

·        வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது.

·   வேலூர் மாவட்டத்தில் 937  அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கி தொடங்கி வைத்தார்.

2026-2027-ம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள் உள்ளிட்ட உபகரண பொருட்கள் வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலக்ஸ், மேல்மொணவூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள் மற்றும் சீருடைகளை வழங்கினார்கள். மேலும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளுடன் காலை உணவருந்தினார்.

வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 604 தொடக்க பள்ளிகள், 175 நடுநிலை பள்ளிகள், 73 உயர்நிலைப்பள்ளிகள், 85 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 937 தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

                வேலூர் மாவட்ட அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பில் 2,540 மாணவர்களும், 2,686 மாணவிகளும் என மொத்தம் 5,226 மாணவ. மாணவிகளும், 2-ம் வகுப்பில் 3,491 மாணவர்களும், 3,758 மாணவிகளும் என மொத்தம் 7,249 மாணவ, மாணவிகளும், 3-ம் வகுப்பில் 3,693 மாணவர்களும். 3,983 மாணவிகளும் என மொத்தம் 7,676 மாணவ, மாணவிகளும், 4-ம் வகுப்பில் 4,233 மாணவர்களும், 4,449 மாணவிகளும் என மொத்தம் 8,682 மாணவ, மாணவிகளும், 5-ம் வகுப்பில் 3,928 மாணவர்களும், 4,226 மாணவிகளும் என மொத்தம் 8,154 மாணவ, மாணவிகளும், 6-ம் வகுப்பில் 5,059 மாணவர்களும், 5,503 மாணவிகளும் என மொத்தம் 10,562 மாணவ, மாணவிகளும், 7-ம் வகுப்பில் 6,186 மாணவர்களும், 6,911 மாணவிகளும் என மொத்தம் 13,097 மாணவ, மாணவிகளும், 8-ம் வகுப்பில் 6,398 மாணவர்களும், 6,931 மாணவிகளும் என மொத்தம் 13,329 மாணவ, மாணவிகளும், 9-ம் வகுப்பில் 7,106 மாணவர்களும், 7,829 மாணவிகளும் என மொத்தம் 14,935 மாணவ, மாணவிகளும். 10-ம் வகுப்பில் 6,784 மாணவர்களும், 7,507 மாணவிகளும் என மொத்தம் 14,291 மாணவ, மாணவிகளும், 11-ம் வகுப்பில் 4,978 மாணவர்களும், 6,667 மாணவிகளும் என மொத்தம் 11,645 மாணவ, மாணவிகளும், 12-ம் வகுப்பில் 5,079  மாணவர்களும், 6,914 மாணவிகளும் என மொத்தம் 11,993 மாணவ, மாணவிகளும் என 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 59,475 மாணவர்கள் மற்றும் 67,364 மாணவிகள் என மொத்தம் 1,26,839 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

2026-2027 கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 1,26,839 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களும், 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் 1,03,201 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாட குறிப்பேடுகளும், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 73,975 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகளும், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 1,26,839 மாணவிகளுக்கு விலையில்லா புத்தகப்பைகளும், 6 மற்றும் 9 (7, 8 புதிதாக சேரும் மாணவர்கள்) பயிலும் 26,497 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா புவியியல் வரைபடங்களும், 6 மற்றும் 7 முதல் 10 வரை புதிதாக சேரும் மாணவ, மாணவிகளுக்கு 12,562 எண்ணிக்கையில் விலையில்ல கணி உபகரணப் பெட்டிகளும் (Geometry box), 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 36,987 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா காலணிகளும் (Foot wear). 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் 66,214 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா காலேந்திகளும் (Shoes), 6-ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பயிலும் 66,214 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா காலுறைகளும் (Socks), 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மலை பள்ளிகளில் பயிலும் 1,209 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா உறை காலணிகளும் (Ankle Boot), 1-ம் வகுப்பு முதல் 2-ம் வகுப்பு வரை பயிலும் 12,475 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா வண்ண கிரையான்களும் (Crayons), 3-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா வண்ண பென்சில்களும். 1-ம் வகுப்பு முதல்   8-ம் வகுப்பு வரை பயிலும் 1,209 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மழையாடைகளும் (Rain Coat). 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 1,209 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கம்பளிச் சட்டைகளும் (Sweater) அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் வழங்கப்படவுள்ளது.

                முன்னதாக மாவட்ட ஆட்சி தலைவர் வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரியில் அமைந்துள்ள முதலமைச்சரின் காலை உணவு திட்ட மைய சமையற் கூடத்தை பார்வையிட்டு, மாணவ, மாணவிகளுக்கு சமைக்கப்பட்ட காலை உணவின் தரத்தை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் இரா.லெட்சுமணன்,  மகளிர் திட்ட இயக்குநர் பாலமுருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா, மாவட்ட ஊராட்சி செயலாளர் யுவராஜ், மாநகர நல அலுவலர் மரு.பிரதாப்குமார், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) கேசவன், வட்டார கல்வி அலுவலர் தேவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 





Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.