• பாஜக அண்ணாமலை பிறந்த நாள் - தங்கத்தேர் இழுத்து வழிபாடு.
· பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பாஜக-வினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு.
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு பாஜக-வை சேர்ந்த மனோகரன், ஜெகன் மற்றும் பாபு ஆகியோர் முன்னிலையில்
பாரதிய ஜனதா கட்சியினர் அண்ணாமலை நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்றிட வேண்டும். தொடர்ந்து மக்களுக்காக அவர் பணியாற்றிட வேண்டி தங்கத்தேரில் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மனை வைத்து மேளதாளங்கள் முழங்க ஆலயத்தை சுற்றி வலம் வந்து தங்கத்தேரை இழுத்து வழிபாடு செய்தனர்.

Comments
Post a Comment