• மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி அரசு பள்ளிகளை மூட கூடாது.

·         தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடம் மற்றும் ஆசிரியர் பணியிடங்களை உடனே புதிய அரசு மாணவர் நலன் கருதி நிரப்ப வேண்டும்

·          தமிழகத்தில் தனியார் பள்ளிகளே இனி துவங்கமாட்டோம் அனுமதி கிடையாது என புதிய அரசு அறிவித்தால் அரசு பள்ளிகள் மேம்படும் 

·         மும்மொழி கொள்கையை கொண்டு வந்தால் ஆசிரியர்கள் கடுமையான போராட்டங்களை நடத்துவோம்  

·         மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி அரசு பள்ளிகளை மூட கூடாது

  -          தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் வேலூரில் பேட்டி

          வேலூர் மாவட்டம், வேலூரில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சார்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு மற்றும் 100 சதவிகிதம் தேர்ச்சி அடைந்த பள்ளிகளுக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு உள்ளிட்ட ஐம்பெரும் விழா தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது.

     இதில் மாநில தலைவர் தியாகராஜன் கலந்து கொண்டு விருதுகளையும் பாராட்டுகளையும் வழங்கினார். இதில் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் மாநில பொருளாளர் உதயகுமார் உள்ளிட்டோரும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும்  இதில் கலந்து கொண்டனர்.

           பின்னர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

     புதிய அரசிடம் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கால் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. பல நடவடிக்கைகளை திமுக அரசு அப்போது செய்தது. ஆனால் இந்த வழக்கில் முன்னேற்றத்தை கொண்டு வர தற்போது முதலமைச்சர் ஜோசப்விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     குறிப்பாக தலைமை ஆசிரியர்  பணியிடங்களில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தாமல் காலியாக இருக்கிறது. விரைவில் தீர்ப்பாணை வரும் என துறை முயற்சி செய்கிறது. ஆனால் பின்னடைவை பார்க்கிறோம். கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்பார்த்தோம். கட்டாய கல்வி சட்டம் கொண்டு வருவதற்கு முன்பாக  பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு வேண்டும். உச்சநீதிமன்றம்  தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதில் சட்டம் கொண்டு வருவார்கள் என எதிர்பார்த்தோம். கொண்டு வரவில்லை. இது தமிழ்நாட்டு பிரச்சணை மட்டுமல்லை. தேச பிரச்சணை.

    பிரதமர் உடனடியாக நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறாமலேயே பணி ஓய்வு பெற்றுவிட்டனர். உச்சநீதிமன்ற சொன்ன மூன்றாண்டை கூட கணக்கில் வைத்து பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். அப்போதுதான் மாணவர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். கற்றல் கற்பித்தலும் மேம்படும்.

     மாணவர்களின் நலனை கருதி தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிகல்வி துறை அமைச்சரும் போர்கால அடிப்படையில் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும். தன் பங்களிப்பு ஓய்வூதியத்திற்கு மாற்றாக கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஓய்வூதிய உறுதியளிப்பு திட்டத்தில் பணி ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு உடனடியாக பென்ஷன் வழங்க வேண்டும். பள்ளிகல்வி துறை அமைச்சர் தீர்க்கமான முடிவு எடுத்து பதவி உயர்வில் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கபடும் என முடிவு செய்ய வேண்டும்.

     பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும். நூறு சதவிகிதம் ஓட்டத்தில் 90 சதவிகிதத்தை கடந்த ஆட்சியில் முடித்தனர். ஆனால் உடனடியாக மீதமுள்ள பணியை தமிழக அரசு முடிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சதவிகிதம் குறைந்துள்ளதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கடந்த ஆட்சியில் மாணவர்களுக்காக கொண்டு வந்த எந்த திட்டங்களையும் இந்த அரசு  கைவிடவில்லை.

     கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சேர்க்கை விகிதம் அதிகரிக்கும். சமூக நீதி பேசுகிற அரசு அனைத்து ஊர்களிலும் அரசு பள்ளிகள் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மாணவர் எண்ணிகையை காரணம் காட்டி அரசு பள்ளிகளை மூடகூடாது. தேர்தலுக்கு மட்டும் இரண்டு வாக்காளர்கள் இருந்தாலும் அக்கிராமத்தில் வாக்குசாவடியை வைக்கிறார்கள்.

          அதைபோல் அரசு பள்ளியில் சில மாணவர்களே பயின்றாலும் அவர்களுக்கு கல்வி அவசியம். அதனால் எக்காரணம் கொண்டும் அரசு பள்ளியை மாணவர்களின் எண்ணிகையை காரணம் காட்டி மூட கூடாது. மும்மொழி கொள்கை ஏற்கமாட்டோம் என தமிழக அரசு சொல்லியுள்ளது. அதையும் மீறி மத்திய அரசு மும்மொழி கொள்கையை கொண்டு வர முயன்றால் ஆசிரியர்கள் கடும் போராட்டங்களில் ஈடுபடுவோம்.

       தமிழை தூக்கி பிடிப்போம். மேலும் தமிழக அரசு தனியார் பள்ளி கட்டணங்களை நோட்டீஸ் போர்டில் ஒட்ட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நல்லது வெளிப்படையாக இருக்க வேண்டும். இது நல்லது. ஆனால் எல்லாவற்றையும் ஜீபூம்பா என அவர்களால் செய்ய முடியாது. ஆனால் இந்த ஆட்சியாளர்கள் ஒன்று செய்யலாம். இனி தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்கமாட்டோம் என முடிவு செய்து  இந்த அரசு தனியார் பள்ளிகளை  ஊக்குவிக்காது அரசு பள்ளிகளை தான் ஊக்குவிக்கும் என அரசு முடிவெடுத்தால் அரசு பள்ளிகள் மேம்பாடும் முன்னேற்றமும் அடையும் என கூறினார் .

பேட்டி: தியாகராஜன் (தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர்)

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.