• தூய்மை பாரத இயக்கம் விண்ணப்பங்கள்.
· தூய்மை பாரத இயக்கம் விண்ணப்பங்கள்.
· வேலூர் கிராம ஊராட்சிகளில் தூய்மை பாரத இயக்கம் (கிராமம்) திட்ட பணிகளை திறம்பட செயல்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும், மாவட்ட அளவில் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு (DPMU) மற்றும் தகவல் கல்வி தொடர்பு பிரிவு (IEC) ஆகியவை உருவாக்கப்பட்டு வெளிமுகமை (Outsourcing) முறையில் திடக்கழிவு மேலாண்மை (SWM) மற்றும் சுகாதாரத்திற்கு (Sanitation) இரண்டு பணியாளர்களையும், தகவல் கல்வி தொடர்பு பிரிவிற்கு (IEC) இரண்டு பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், கிராம ஊராட்சிகளில் தூய்மை பாரத இயக்கம் (கிராமம்) திட்ட பணிகளை திறம்பட செயல்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும், மாவட்ட அளவில் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு (DPMU) மற்றும் தகவல் கல்வி தொடர்பு பிரிவு (IEC) ஆகியவை உருவாக்கப்பட்டு வெளிமுகமை (Outsourcing) முறையில் திடக்கழிவு மேலாண்மை (SWM) மற்றும் சுகாதாரத்திற்கு (Sanitation) இரண்டு பணியாளர்களையும், மற்றும் தகவல் கல்வி தொடர்பு பிரிவிற்கு (IEC) இரண்டு பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
SBM (G) திட்டத்தின் கீழ் உருவாக்கப்படவுள்ள பதவி, தகுதி மற்றும் ஊதிய விவரங்கள்.
I. மாவட்ட திட்ட மேலாண்மை அலகு (DPMU)
|
Ø |
திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரம் |
2 பணியாளர்கள் |
|
Ø |
திரவக்கழிவு மேலாண்மை |
1 பணியாளர் |
|
Ø |
திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் ஒங்கிணைப்பு |
1 பணியாளர் |
1.திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரம் (2 பணியாளர்கள்) & திரவக்கழிவு மேலாண்மை (1 பணியாளர்) பதவிகளுக்கான தகுதிகள் மற்றும் ஊதியம்.
Ø சுற்றுச்சூழல் பொறியியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Ø சுற்றுச்சூழல் பொறியியல் துறை, Water Sanitation and Hygiene (WASH), Mechanical System and E-Stands (M&E), திடக்கழிவு மேலாண்மை, திரவக்கழிவு மேலாண்மை மற்றும் வளர்ச்சித்துறை ஆகியவற்றில் 1 முதல் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Ø இந்தியாவில் உள்ள மத்திய அல்லது மாநில சட்டமன்றத்தின் சட்டத்தால் இணைக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது பல்கலைக்கழக மானிய குழு சட்டம் 1956-ன் பிரிவு 3-ன் கீழ் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்ட அல்லது பாராளுமன்ற சட்டத்தால் நிறுவப்பட்ட பிற கல்வி நிறுவனங்கள் ஆகிய ஏதாவது ஒன்றில் இளங்கலை பட்டம் அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
Ø இப்பதவிகளுக்கான மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.35,000/- (சேவை கட்டணம் உட்பட) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிலிருந்து சம்மந்தப்பட்ட வெளிமுகமை (Outsourcing) நிறுவனம் மூலம் வழங்கப்படும்.
2.திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு பதவிக்கான தகுதிகள் மற்றும் ஊதியம் :
Ø B.Tech./M.B.A./M.Sc.ஆகிய ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Ø இந்தியாவில் உள்ள மத்திய அல்லது மாநில சட்டமன்றத்தின் சட்டத்தால் இணைக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது பல்கலைக்கழக மானிய குழு சட்டம் 1956-ன் பிரிவு 3-ன் கீழ் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்ட அல்லது பாராளுமன்ற சட்டத்தால் நிறுவப்பட்ட பிற கல்வி நிறுவனங்கள் ஆகிய ஏதாவது ஒன்றில் இளங்கலை பட்டம் அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
Ø இப்பதவிகளுக்கான மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.35,000/- (சேவை கட்டணம் உட்பட) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிலிருந்து சம்மந்தப்பட்ட வெளிமுகமை (Outsourcing) நிறுவனம் மூலம் வழங்கப்படும்.
II.தகவல், கல்வி மற்றும் தொடர்பு (IEC Cell) பிரிவு (2 பணியாளர்கள்) பதவிகளுக்கான தகுதிகள் மற்றும் ஊதியம் :
Ø Mass Communication/Mass Media ஆகிய ஏதாவது ஒன்றில் முதுகலை பட்டம் அல்லது அதற்கிணங்க கல்வித்தகுதி புகழ்பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும்.
Ø Mass Communication/Mass Media/Water Sanitation and Hygine (WASH) /Social Mobilization/Public Sector Communication ஆகியவற்றில் 2 முதல் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Ø அரசு அல்லது தனியார் துறையில் சமூக ஊடக பிரிவுகளின் பணிபுரிந்த விண்ணப்பதார்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
Ø தொடர்புடைய தரசு மற்றும் ஆவணங்களை தேட Ms-Word, Power Point, Adobe Photoshop & Illustrator போன்ற பொதுவாக பயன்படுத்தப்படும் தொகுப்புகளுடன் கணினித்திறன் உள்ளவர்கள்.
Ø Video Making, Meme Making துண்டு பிரசுரம் மற்றும் சுவரொட்டிகளை உருவாக்குதல் போன்றவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
Ø இப்பதவிகளுக்கான மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.25,000/- (சேவை கட்டணம் உட்பட) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிலிருந்து சம்மந்தப்பட்ட வெளிமுகமை (Outsourcing) நிறுவனம் மூலம் வழங்கப்படும்.
உரிய கல்விச் சான்று நகல் மற்றும் அனுபவ சான்று நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பத்தினை நேரடியாக (அ) அஞ்சல் வழியாகவோ 15.06.2026-க்குள் மேலாளர், மாவட்ட முகமை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேலூர் என்ற முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். மேற்குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் கிடைக்கபெறும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது என மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலக்ஸ், தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment