• வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் பணி நியமனம்.
· வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் பணிநியமனம்.
பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை வேலூர் மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society, Vellore) மூலமாக தொகுப்பூதிய அடிப்படையில் Ayush Medical Officer Siddha (NRHM), Dispenser (NRHM), Therapeutic Assistant (NRHM),Therapeutic Assistant (NRHM),Therapeutic Assistant (NAM),Therapeutic Assistant (NAM),Senior Tuberculosis Laboratory Supervisor (STLS), Driver, Medical Officer, Urban Health Staff Nurse(ANM), Staff Nurse, Pharmacist, Radiographer, Lab Technician Gr-II, Multipurpose Hospital Worker, Dental Technician, Sanitary Worker, Health Inspector, Clinical Psychologist ஆகிய பணியிடங்களுக்கு பணிநியமனம் செய்ய தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேற்கண்ட காலிப்பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையிலும், முற்றிலும் தற்காலிகமாகவும் பணிநியமனம் செய்ய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 26.06.2026 அன்று மாலை 5.00 மணிக்குள்ளாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் https://vellore.nic.in/notice category / recruitment என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம், B பிளாக், 2-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சத்துவாச்சாரி, வேலூர்-632009 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலம் அனுப்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. அறிவிக்கப்பட்ட தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலக்ஸ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment