• காட்பாடி சன்பீம் பள்ளி ஆண்டு விழா.

·        காட்பாடி சன்பீம் பள்ளி ஆண்டு விழா - சி.எம்.சி. மருத்துவமனை இணைஇயக்குனர் பரிசு வழங்கி பாராட்டு.

    வேலூர் மாவட்டம், காட்பாடி, சன்பீம் சிபிஎஸ்இ பள்ளியில் ஆண்டு விழா (சன்பீம் டே–2026) சிறப்பாக நடைபெற்றது.

     விழாவுக்கு, சன்பீம் பள்ளிகளின் தாளாளர் முனைவர் தங்கபிரகாஷ், துணைதலைவர் ஜார்ஜ்அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிளஸ் 2 மாணவன் மோனிஷ் வரவேற்றார். மாணவி கேசில்டா ஆண்டு அறிக்கையை தொகுத்து வழங்கினார். மாணவி எல்லோசியா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    தொடர்ந்து விழாவுக்கு, சன்பீம் பள்ளிகளின் தலைவர் அரிகோபாலன் தலைமை வகித்து பேசுகையில், வகுப்பறைக்கு செல்லும் முன் ஆசிரியர்கள் தங்களை தினம் தினம் புதுப்பித்து கொண்டு மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கும் வகையில் தயார்படுத்தி கொள்ள வேண்டும்.

        அதோடு, தினசரி நிகழ்வுகள் மற்றும் சமகால தகவல்களையும் அறிந்து கொண்டே இருக்க வேண்டும். மேலும் பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே நல்ல இணைப்பாக இருந்து உறுதுணையாக செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

   சிறப்பு விருந்தினராக, வேலுார் சி.எம்.சி. மருத்துவமனை இணைஇயக்குநர் உதய்ஜார்ஜ்சகாரியா பங்கேற்று பேசுகையில்,

       சன்பீம் பள்ளிகள் கல்வி, ஒழுக்கம் மற்றும் தலைமை பண்பு ஆகியவற்றை நோக்கமாக கொண்ட செயல்பாடு சிறப்புக்கு உரியது. மாணவர்களுக்கு கல்வியோடு விளையாட்டும் முக்கியத்துவம். மாணவர்கள் தங்களை குறித்து புறம் பேசுபவர்களை சிந்திக்காமல், கவலையும் இல்லாமல் குறிக்கோளை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.

     இதையடுத்து கல்வி, விளையாட்டு ஆகியவை சார்ந்து நடந்த பல துறைகளின் போட்டிகளில் வெற்றி பெற்ற 395-க்கும் அதிகமான மாணவ, மாணவிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார். மேலும், சிறந்த கல்விக்கு பட்டேல் அணிக்கும், இல்லத்து போட்டிகளில் ஒட்டுமொத்த முதலிடம் பெற்ற நேரு அணிக்கும் விருதுகள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

     விழாவில், சன்பீம் பள்ளிகளின் முதல்வர்கள், துணைமுதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.