• வேலூர் முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்.
· வேலூர் மாவட்டத்தில் முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.
வேலூர் மாவட்டம், வேலூர், பென்ட்லேண்ட் அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ், தலைமையில் அனைவரும் முதியோர் வன்கொடுமை ஒழிப்பு உறுதிமொழியை எடுத்து கொண்டனர். பின்னர் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி கடைப்பிடிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது
இன்றைய தினம் முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம். முதியோர்களுக்கு நாம் உரிய மரியாதையையும், முக்கியத்துவத்தையும் வழங்க வேண்டும். இது ஒவ்வொரு தனி மனிதனுடைய பொறுப்பு, ஒரு சமூகத்தின் பொறுப்பு, இந்த அரசினுடைய பொறுப்பு. அரசு முதியோர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நம்முடைய வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதியோர் சிறப்பு மருத்துவ பிரிவு செயல்பட்டு வருகிறது.
பெற்றோர்கள் நம்மை வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வர எவ்வளவு பாடுபட்டு இருப்பார்கள். கூட்டு குடும்பம் என்ற நிலை தற்போது குறைந்து கொண்டே வரும் நிலையில் நாம் அறிந்தோ, அறியாமலோ முதியோர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்குவதிலிருந்து விலகி விடுகிறோம்.
மருத்துவமனை, பேருந்து நிலையங்கள், வணிகப்பகுதிகள் போன்ற பொதுஇடங்களில் முதியோருக்கு நாம் உரிய மரியாதை தர வேண்டும். அதேபோன்று மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் முதியோர்களை மருத்துவர்களும், செவிலியர்களும் சிரித்த இன்முகத்தோடு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலக்ஸ் தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் அரசு வேலூர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மரு.ரோகிணிதேவி, துணைமுதல்வர் மரு.கௌரி வெளிகெண்டலா, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ரதி திலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலர் மரு.டி.ரவிச்சந்திரன், மருந்தியல் பிரிவு தலைவர் மரு.சக்தி, மகப்பேறு பிரிவு தலைவர் மரு.கீதா, குழந்தைகள் நலப்பிரிவு தலைவர் மரு.ரவிசங்கர், முதியோர் மருத்துவ பிரிவு அலுவலர் மரு.பிஜின் ஆலிவர் ஜான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment