• உலக சுற்றுசூழல் தினம்.

·        உலக சுற்றுசூழல் தினம்.

·        வேலூர் மாவட்டத்தில் 1,000 மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டத்தை  மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.

உலக சுற்றுச்சூழல் தினம் 2026, காலநிலை நடவடிக்கை (Climate Action)” என்ற கருப்பொருளின் கீழ் 05.06.2026 அன்று அனுசரிக்கப்படவுள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நிலையான வளர்ச்சி நடைமுறைகள், சூழலியல் அமைப்புகளின் மீட்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு மற்றும் சமூகப் பங்கேற்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்நாள் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் பள்ளி பசுமைப் படைகள் (Eco-Clubs) மூலம் பெரிய அளவிலான மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகளை நடத்த அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித் துறை மற்றும் வனத்துறையுடன் ஒருங்கிணைந்து பள்ளிகளில் மரக்கன்று நடும் நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யும். மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், உள்ளூர் சமூகத்தினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரின் செயற்பாட்டுப் பங்கேற்புடன், உள்ளூர் சூழலுக்கு ஏற்ற நாட்டின மரக்கன்றுகள் (Native species) நடப்படவுள்ளன. மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் புவியியல் குறியீடு (Geo-tagged) செய்யப்பட்ட புகைப்படங்கள் மூலம் பதிவுசெய்யப்பட்டு, EEP இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன.

பள்ளி பசுமைப் படைகள் (Eco-Clubs) மூலம் வேலூர் மாவட்டத்தில் 158 பள்ளிகள் மற்றும் ஈர நிலங்களாக கண்டறியப்பட்டுள்ள 6 இடங்களில் 1000 மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது.

அதனடிப்படையில் உலக சுற்றுச்சூழல் தினம் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 1000 மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் மரக்கன்றுகளை நடவு செய்தார்.  

. தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் அன்பூண்டி ஏரிக்கரையில் மரக்கன்றுகளை  நடவு செய்தார்.

மரக்கன்று நடும் நிகழ்ச்சிகளுடன் இணைந்து, மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, படைப்பாற்றல் மற்றும் நிலையான கழிவு மேலாண்மை நடைமுறைகளை ஊக்குவிக்கும் வகையில், விதைப்பந்து (Seed Ball) தயாரித்தல், பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தி செடித்தொட்டிகள் உருவாக்குதல், மற்றும் தேங்காய் ஓடுகளைப் பயன்படுத்தி அலங்காரப் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படவுள்ளன. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெருமளவிலான மரக்கன்று நடும் இயக்கங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. தூய்மை, சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு மற்றும் சமூகப் பங்கேற்பை மேம்படுத்தும் நோக்கில், தூய்மை இயக்கங்கள் (Clean-up Drives) நடத்தப்படவுள்ளன. ஈரநிலங்களின் வரப்புப் பகுதிகளில் (Bunds of wetlands) பசுமை வளத்தை அதிகரித்து, ஈரநிலச் சூழலியல் அமைப்பைப் பாதுகாக்கும் நோக்கில் மரக்கன்றுகள் நடும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

                இந்த நிகழ்வு மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மேம்படுத்தவும், மரம் நடும் பண்பாட்டை ஊக்குவிக்கவும், சமூகப் பங்கேற்பை வலுப்படுத்தவும், காலநிலை நடவடிக்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கூட்டு பொறுப்புணர்வை வளர்க்கவும் ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும். மேலும், நிலையான மற்றும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்திற்கும் இந்நிகழ்வு முக்கிய பங்களிப்பை வழங்கும்.

இந்நிகழ்வின்போது அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் த.வேலழகன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா, பொய்கை ஊராட்சி மன்ற தலைவர் க.வெங்கடேசன், மாவட்ட பசுமை ஒருங்கிணைப்பாளர் செல்வி நாகதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வினோத்குமார், செல்வகுமார் உட்பட பலர்  உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.