• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்.

·        வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 629   கோரிக்கை மனுக்களை பெற்றார்..

 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதேமில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் தலைமையில்  நடைபெற்றது.

மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவிதொகை வேளாண்மை துறை, காவல் துறை. ஊரக வளார்ச்சி துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சி துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சார துறை சார்பான குறைகள், மாற்று திறனாளிகள் நல துறை. மருத்துவ துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 629 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து பெற்று கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாற்று திறனாளிகள் நல துறையின் சார்பில்  இயக்க திறன் குறைபாடுடைய 3 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூ.15,750/- வீதம் ரூ.47,250/- மதிப்பிலான சக்கர நாற்காலிகளையும், மூளை முடக்குவாதத்தால்  பாதிக்கப்பட்ட 1 மாற்று திறனாளிக்கு ரூ.7300/- மதிப்பிலான  சிறப்பு  நாற்காலியினையும், செவித்திறன் குறைபாடுடைய 3 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூ.3,285/- வீதம் ரூ.9,855/- மதிப்பிலான காதொலி கருவிகளும் என மொத்தம் 7 மாற்று திறனாளிகளுக்கு  ரூ.64,405/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.

 மேலும் பிற்படுத்தப்பட்டோர் நல துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு சீர்மரபினர் நல வாரிய அடையாள அட்டைகளையும், சிறுபான்மையினர் நல துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு உலமாக்கள் நல வாரிய அடையாள அட்டைகளையும், முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டியில்  வெற்றி பெற்ற மாணவ, மணவிகளுக்கு  கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.

முன்னதாக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் அனைவரும் முதியோர் வன்கொடுமை ஒழிப்பு  உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.

 இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், தனிதுணை ஆட்சியர் (ச.பா.தி) சி.மாறன், தனிதுணை ஆட்சியர் (முத்திரை தாள்) ரமேஷ்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் உமா,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல துறை அலுவலர் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், துணைஆட்சியர் (பயிற்சி) கணேசன், மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.