• வேலூர் வெங்கடாபுரம் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம்.

 ·        உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாபுரம்  ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் -  மாவட்ட ஆட்சி தலைவர் சிறப்பு  பார்வையாளராக  கலந்து கொண்டார்.

         உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாபுரம்  ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில்  மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் சிறப்பு பார்வையாளராக  கலந்து கொண்டார்.

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. அதன் அடிப்படையில் வேலூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாபு, தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலக்ஸ் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் சுற்றுசூழல் உறுதிமொழியை மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் அனைவரும் எடுத்து கொண்டனர். பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

அனைத்து ஊராட்சிகளிலும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்த கிராம சபா கூட்டம் நடத்தப்படுகிறது. கிராம சபா கூட்டப்படுவதின் நோக்கம் ஆண்டின் வரவு செலவு விவரங்களை வெளிப்படைத் தன்மையாகவும், சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கவும், மேலும் கிராம ஊராட்சியில் வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் வரி, நூலக வரி, உரிமை கட்டணம், தெருவிளக்கு பராமரிப்பு, மேல்நிலை நீர்தேக்க தொட்டி சுத்தம் செய்தல், பைப்லைன் பராமரிப்பு போன்றவை கிராம ஊராட்சியில் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த கிராம சபை கூட்டத்தில் உலக சுற்றுசூழல் தினம் 2026-யை முன்னிட்டு 01.06.2026 முதல் 0506.2026 வரையில்காலநிலை நடவடிக்கை (Climate Action)” என்ற கருப்பொருளுடன் “Swachh Gaon, Surakshit Jalvayu” (தூய்மையான கிராமம், பாதுகாப்பான காலநிலை) எனும் பிரச்சாரத்தின் சாதனைகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 குறித்த விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டது.

கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது

கிராம சபை கூட்டத்தில் கிராமத்தை தூய்மையாக பராமரிப்பது குறித்த உறுதிமொழியை நாம் அனைவரும் ஏற்றுள்ளோம். கிராமத்தை தூய்மையாக பராமரிக்க பொதுமக்களும், பஞ்சாயத்து நிர்வாகமும் ஒத்துழைத்தால்தான் முடியும்.  இந்த இரண்டு பேரோட ஒத்துழைப்பும் ரொம்ப முக்கியம். பொதுமக்களாகிய நாம் நாள்தோறும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து வழங்க வேண்டும். காலையில் குப்பைகளை சேகரிக்க வரும்போது நம்ம கொஞ்சம் தொய்வு படாமல், குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும். குப்பை சேகரிக்க வரும் பணியாளர்களிடம் கொடுக்காமல் அவர்கள் சென்ற பிறகு அப்படியே போட்டுவிடக்கூடாது. அவ்வாறு செய்தால் அந்த குப்பைகள் நம்முடைய இடத்திலேயே பரவி அசுத்தமாகிடும். ம்ம வாழும் இடம், நம் சுற்றுப்புறம் எல்லாமே தூய்மையாக  பராமரிப்பது நம்முடைய பொறுப்பு.

 நாம் இன்று எடுத்துள்ள உறுதிமொழியை நிறைவேற்றும் விதமாக பொறுப்போடு செயல்பட வேண்டும்.  இது நம் ஒவ்வொருவருடைய  கடமையாகும். இந்த  பஞ்சாயத்தில் நான் வரும்போது விசாரிச்சிட்டு வந்தேன். குப்பைகளிலிருந்து இயற்கை உரங்கள் தயாரிப்பதாகவும், அவற்றை நம்மளோட விவசாயிகளுக்கு கொடுப்பதாகவும் கேள்வி பட்டேன். இது போன்ற விஷயங்களை இன்னும் சிறப்பாக தொடர்ந்து செய்ய வேண்டும்.  இந்த ஊராட்சி பூஜ்ஜிய கழிவுகள் மாதிரி  (Zero Waste Model) கிராமமாக திகழு வேண்டும்.  குப்பைகளை ஈர குப்பைகள் மற்றும் உலர் குப்பைகள் என  பிரித்து வழங்க வேண்டும். ஈரக்கழிவுகளிலிருந்து உரமாகவும்,  மற்ற கழிவுகளை  தரம் பிரித்து சிலவற்றை மறுசுழற்சி செய்ய வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் தெரிவித்தார்.

     இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, மகளிர் திட்ட இயக்குநர் பாலமுருகன், வேலூர் ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் த.பாபு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால், வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற துணைதலைவர் பார்த்திபன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பா.சதீஷ்குமார், திருமலை, ஊராட்சி மன்ற செயலாளர் பாஸ்கர் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

         

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.