• ஜுன் மாத விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

 ·        ஜுன் 2026-ம் மாத விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

                ஜுன் 2026-ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்,  30.06.2026 அன்று காலை 10.00 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்ட   அரங்கில்  (5-வது தளம்)  நடைபெற  உள்ளது.

இக்கூட்டத்தில் வேளாண்மை துறை,  தோட்டக்கலை துறை,  வேளாண்    பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டுவளர்ச்சி துறை, மீன்வள துறை, கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள்,  கூட்டுறவு  துறை,  நீர்வள ஆதார அமைப்பு, வனத்துறை,  மாசு  கட்டுப்பாடு  வாரியம்,   மின்சார  துறை, போக்குவரத்து துறை, பால்வள துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளார்கள்.

மேலும் கடந்த மாதத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க உள்ளார்கள். எனவே, வேலூர் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் களப்பிரச்சனைகளை களைந்திட இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்சனைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சனைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்திடுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலக்ஸ் தெரிவித்துள்ளார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.