• வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சனி மஹா பிரதோஷம்.

·         வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம் – மஹா தீபாராதனை. 

·         கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

       வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், கரும்பு சாறு, இளநீர், பன்னீர், திருநீறு  உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

     பின்னர் சந்தன காப்பு அலங்காரங்களை செய்து மலர் மாலைகள், வில்வ இலைகள், அருகம்புல் மாலைகளால் அலங்காரங்களை செய்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் அரோகரா முழக்கங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனைத்து தோஷங்களும் நீங்க வேண்டி நந்தி பகவானை வழிபட்டனர். மேலும் பக்தர்கள் கொட்டும் மழையிலும் சாமி தரிசனம் செய்தனர்.  சாமி உட்பிரகார உலாவும் வந்தது.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.