• வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சனம்.

·         வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சனம். 

·         நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மகாதீபாராதனை கோபுர தரிசனம்திரளான பக்தர்கள் வழிபாடு.  

            வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு ஸ்ரீ நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு தேன், பால், தயிர், சந்தனம், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை சிறப்பு யாகம் நடைபெற்றது.

     பின்னர் நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு மலர் மாலைகள் வில்வ இலை மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாள் கோபுர தரிசனத்திற்கு பின்னர் வீதி உலாவுக்காக ஆலயத்திலிருந்து புறப்பட்டு சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.