• வேலூர் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் கைவிரல் ரேகை பதிவு.

·        வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் - மாவட்ட ஆட்சி தலைவர் தகவல்

            வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். தற்போது வரை பதிவு செய்யாதவர்கள் 30.06.2026-க்குள் நியாய விலை கடைகளுக்கு சென்று கைவிரல் ரேகையினை பதிவு செய்திட கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 

               மேலும், குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாய விலை கடைகளுக்கு சென்று தங்களது கைவிரல் ரேகையினை வருகிற ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்து தங்களது உரிமையினை உறுதி செய்திடவும், இறந்த உறுப்பினர்களின் பெயர்களை 30.06.2026-க்குள் வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நீக்கம் செய்திட வேண்டும். 

            மேலும், நியாய விலை கடைகளுக்கு நேரில் சென்று கைவிரல் ரேகை பதிவு செய்ய இயலாத நிலையிலுள்ள வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் பகுதியிலுள்ள விற்பனையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் விற்பனையாளர் தங்களது இல்லத்திற்கே வந்து கைவிரல் ரேகையினை தங்களது இல்லத்திலேயே பதிவு செய்து கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.