• சுய உதவி குழு சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் தேர்வு.
- சுய உதவி குழு சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் தேர்வு.
வேலூர் மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஒவ்வொரு 50 சுய உதவி குழுக்களுக்கு ஒரு சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் (கடன் மற்றும் வங்கி சேவைகள்) தேர்வு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து 05.05.2026 அன்றுள்ளவாறு மதிகளம் (இணைய தளத்தில்) உள்ள பதிவுகளின்படி, 114 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
வேலுார் மாவட்டத்தில் தற்பொழுது காலியாக உள்ள 19 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியான சுய உதவிக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டியுள்ள விவரம் பின்வருமாறு.
|
வ.எண் |
ஊராட்சி ஒன்றியத்தின் பெயர் |
காலிப்பணியிடத்தின் எண்ணிக்கை |
|
1 |
அணைக்கட்டு |
3 |
|
2 |
குடியாத்தம் |
5 |
|
3 |
காட்பாடி |
1 |
|
4 |
கணியம்பாடி |
0 |
|
5 |
கீ.வ.குப்பம் |
0 |
|
6 |
பேர்ணாம்பட்டு |
7 |
|
7 |
வேலூர் |
3 |
|
|
மொத்தம் |
19 |
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளருக்கான தகுதிகள்:
· ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சார்ந்த பெண் சுய உதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
· சுய உதவிக்குழு ஊக்குநராக குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
· சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர் சமுதாயம் சார்ந்த அமைப்பு பணியாளராகவே அல்லது தனியார் நிறுவனங்களில் முழு நேரப் பணியாளராக பணியில் இருத்தல் கூடாது.
· தேர்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினர் பணிபுரியும் ஊராட்சியை (அல்லது ஊராட்சிகளை) சார்ந்தவராக இருத்தல் அவசியம்.
· மக்கள் நிலை ஆய்வால் கண்டறியப்பட்ட இலக்கு மக்களாக இருத்தல் வேண்டும் (உரிய தகுதிகளுடன் இலக்கு மக்கள் விண்ணப்பிக்காத பட்சத்தில், பிற விண்ணப்பதாரர்களை கருத்தில் கொள்ளலாம்).
· மலைப்பகுதியிலுள்ள ஆதிவாசிகள் குடியிருப்புகளில் மேற்கூறிய உறுப்பினர் இல்லாத நிலையில் ஆண் உறுப்பினரை மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறப்பு ஒப்புதலுடன் தேர்வு செய்யலாம்.
· விண்ணப்பிக்கும் நாளில் 35 வயதுக்கு கீழ் இருத்தல் வேண்டும்.
· 12-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாக எழுதப் படிக்கவும் மற்றும் கணக்கிடும் திறன் உடையவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
· வாராக் கடன் உள்ள குழுவின் உறுப்பினராக இருக்கக்கூடாது.
· மலைப் பகுதிகளில் 12-வது வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் இல்லாத நிலையில் 10-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதர தகுதிகளுடன் இருப்பின் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதியுடன் தகுதியுடையவர்களாக கருதப்படலாம்.
· தகவல் தொடர்பு திறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.
· வங்கிகளுக்குச் சென்று பரிவர்த்தனைகள் செய்தும் கடன் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தும் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
· கணினி திறன் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் உள்ள இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
· ஆண்ட்ராய்டு (Android) கைப்பேசி வைத்திருப்பதவர்களாகவும்அதை இயக்கி குறுந்தகவல் (SMS) மற்றும் Whatsapp-ல் செய்தி அனுப்பவும் மற்றும் செயலி இயக்கும் திறன் பெற்றவர்களாகவும் இருத்தல் அவசியம்.
· மேற்கண்ட தகுதிகளுடைய விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
|
வ.எண் |
விவரம் |
நாள் |
|
1 |
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு குறித்து அறிக்கை செய்ய வேண்டிய நாள் |
27.05.2026 |
|
2 |
விண்ணப்பங்கள் வந்து சேருவதற்கான கடைசி நாள் |
05.06.2026 |
|
3 |
விண்ணப்பங்களை ஆய்வு செய்து விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு குறித்த தகவல் தெரிவிக்க வேண்டிய காலம் |
06.06.2026 முதல் 09.06.2026 |
|
4 |
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் |
15.06.2026 |
|
5 |
நேர்முக தேர்வு நடைபெறம் நாள் |
22.06.2026 |
|
6 |
தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்ய வேண்டிய நாள் |
30.06.2026 |
|
7 |
பணியில் சேர வேண்டிய நாள் |
01.07.2026 |
மேற்காணும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்களில் தகுதியான மகளிர் தங்களது விண்ணப்பத்தினை 05.06.2026-ஆம் தேதி வரை திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, TNSRLM. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்ததுறை கட்டிட வளாகம், வேலூர்-9. என்னும் முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment