• வேலூர் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

·        வேலூர் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் - வேலூர் தியாகி வி.எம். உபயதுல்லா பேருந்து நிலையத்திலிருந்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர்  பி.எஸ்.லீலாஅலெக்ஸ், போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை வேலூர் தியாகி வி.எம்.உபயதுல்லா பேருந்து நிலையத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வண்ணம் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக போதை பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள், போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஆகியவற்றை பொதுமக்கள் இடையே கொண்டு சேர்க்கும் வகையிலும் தமிழ்நாடு மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக் (Start Run, Stop Drug) என்ற தலைப்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், விளையாட்டு வீரர்கள், காவலர்கள் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், வேலூர் தியாகி வி.எம்.உபயதுல்லா பேருந்து நிலையத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சி தலைவர் போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அனைவருக்கும் போதை பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து மாரத்தான் ஓட்டமானது வேலூர் தியாகி வி.எம்.உபயதுல்லா பேருந்து நிலையத்திலிருந்து பாகாயம் சிஎம்சி விளையாட்டு மைதானம் வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. இந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் மற்றும் ஓட்டம் நிறைவு பெற்ற சிஎம்சி மைதானத்தில் சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுக்களும், ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் இருந்தன. மாரத்தான் ஓட்டம் நடைபெற்ற 5 கிலோமீட்டர்  தூரத்திற்கும் போக்குவரத்து காவலர்களால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் இரா.லெட்சுமணன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி, உதவி ஆணையர் (கலால்) குணசேகரன், துணை ஆட்சியர் (பயிற்சி) கணேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தேன்மொழி, மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர் வி, சேதுராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.