• அணைக்கட்டு ஜமாபந்தி நிறைவு நாள்.

·        அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435-ம் பசலி ஆண்டிற்கான  வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு நாள். 

·        மாவட்ட ஆட்சி தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் 192 பயனாளிகளுக்கு
  
ரூ.2 கோடியே  45 இலட்சத்து 91 ஆயிரத்து 714  மதிப்பில்  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026 நிறைவு நாளில் மாவட்ட ஆட்சி தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் 192 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 45 இலட்சத்து  91  ஆயிரத்து 714  மதிப்பில்  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

                வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்தில் விவசாயிகள் சங்க மாநாடு மற்றும் ஜமாபந்தி 17.06.2026 அன்று  தொடங்கி 24.06.2026  வரை அரசு விடுமுறை நாட்கள் மற்றும் திங்கட்கிழமை தவிர்த்து 5 நாட்கள்   நடைபெற்றது.

                அணைக்கட்டு வட்டத்தில் நிறைவு நாளான ஐந்தாம் நாள் ஜமாபந்தியில் அகரம், தோளப்பள்ளி, அக்ரஹாரம், ஆர்ஜாதி, பாலப்பாடி, குருவராஜபாளையம், ராமநாயணிகுப்பம், நெடுமிபாளையம், அரிமலை, குப்பம்பாளையம், சின்னபள்ளிக்குப்பம், பாக்கம், பாக்கம்பாளையம், மேல்பள்ளிப்பட்டு, தென்புதுபட்டு, ஆசனாம்பட்டு, கல்லப்பாறை, குப்பம்பட்டு, வேப்பம்குப்பம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சி தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் அவர்கள் 424  மனுக்களை  பெற்று, வருவாய் ஆவணப்  பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

                மொத்தம் 5 நாட்கள் நடைபெற்ற இந்த ஜமாபந்தி நிகழ்வில் நிலவரி கணக்குகள், பட்டா மாற்றம், பட்டா நகல் கோருதல், அரசு நலத்திட்டங்களின்கீழ் உதவி கோருதல், கிராம வளர்ச்சிக்கான திட்டப்பணிகள், குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் இதர தேவைகள் தொடர்பாக 1197 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சி தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் அவர்களால் பெறப்பட்டது. இவற்றில் 663 மனுக்கள் பரிசீலினை செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலினையில் உள்ளன. இவற்றின்மீது விரைந்து தீர்வு காணப்படும்.

ஜமாபந்தி நிறைவு விழாவில் வருவாய் துறையின் சார்பில் 41 பயனாளிகளுக்கு  பட்டா பெயர் திருத்தம், நில உடமை மேம்பாட்டுத் திட்டம் திருத்தம் ஆணைகளையும், 79 பயனாளிகளுக்கு ரூ.2,37,00,000/- மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களும், 13 பயனாளிகளுக்கு பட்டா மற்றும் உட்பிரிவு மாற்ற ஆணைகளையும்,  35 பயனாளிகளுக்கு ரூ.7,38,500/- மதிப்பிலான திருமண உதவி தொகை, இயற்கை மரணம் உதவி தொகை, கல்வி உதவி தொகைகளையும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், மாற்று திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.42,800/- மதிப்பிலான இலவச சக்கர நாற்காலி, காதொலி கருவி மற்றும் மாற்று திறனாளி அடையாள அட்டைகளும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.1,10,414/- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் ஆணைகளும் என மொத்தம் 192 பயனாளிகளுக்கு ரூ.2,45,91,714/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் வழங்கினார்.

                முன்னதாக ஜமாபந்தி நிறைவு விழாவில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயிர்கடன் தள்ளுபடி, நீர்பாசன வசதிகள், பாலாறு மற்றும் உத்தர காவேரி ஆறுகளில் தடுப்பணை அமைத்தல் போன்ற விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு கருத்துகளை  எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் தெரிவித்ததாவது.

                அணைக்கட்டு வட்டத்திற்கான  ஜமாபந்தி கடந்த மொத்தம் 5 நாட்கள் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஜமாபந்தி நாட்களில் பெறப்பட்ட அனைத்து மனுக்களின்மீதும் தொடர்புடைய அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தீர்வு காண முடியாத மனுக்களுக்கான உரிய காரணத்தை மனுதாரருக்கு விரிவாக அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும். ஜமாபந்தி இன்று நிறைவடைந்தாலும் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைந்து தொடர்ந்து அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இந்த ஜமாபந்தியை சிரமம் பாராமல் நல்ல முறையில் ஏற்பாடு செய்த அணைக்கட்டு வட்டத்தை சார்ந்த வருவாய் துறை அலுவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாக மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்தார்.

                இந்நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் த.வேலழகன், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, ஒன்றிய குழு தலைவர் சி.பாஸ்கரன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் ஏ.செந்தில்குமார்,  மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சி.மாறன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சரவணன், துணை ஆட்சியர் (பயிற்சி) கணேஷ்,  ஒன்றிய குழு உறுப்பினர் சோபனா சபரிநாதன்,  வட்டாட்சியர் சுகுமாரன், சமூக பாதுகாப்பு திட்ட  வட்டாட்சியர் உதயகுமார்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.